கொரோனாவால் உயிரிழந்த 2,000 அரசு ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.600 கோடி: யோகி ஆதித்யநாத் அரசு நிவாரணம்

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட போது கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த 2000 பேர் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக மொத்தம் ரூ.600 கோடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அளித்தது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உத்தரப் பிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட போது கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த 2000 பேர் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக மொத்தம் ரூ.600 கோடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அளித்தது.

  கொரோனா பேரலையின் 2ம் கட்டத்தில் பஞ்சாயத்து தேர்தலை நடத்தி கடும் சர்ச்சைக்குள்ளானார் யோகி ஆதித்யநாத். இதில் 2,000 ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியாகினர் இதனையடுத்து இழப்பீடு அளிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன.

  இந்நிலையில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையை விநியோகிக்க ரூ.605 கோடி தொகையை தேர்தல் ஆணையத்திடம் ஆகஸ்ட் 26ம் தேதி யோகி ஆதித்யநாத் அரசு அளித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.30 லட்சம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  மாவட்ட நீதிபதிகள் இந்தத் தொகையை உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் சேர்ப்பிப்பார்கள்.

  Also Read: டோக்கியோ பாராஒலிம்பிக்: வெள்ளி வென்றார் இந்திய வீரர் பிரவீண் குமார்

  கொரோனாவுக்குப் பலியான சுமார் 2,128 மாநில அரசு ஊழியர்கள் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் 2097 பேர்தான் கொரோனாவினால் பலியானார்கள் மற்றவர்கள் கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு பலியானவர்கள். ஆனால் 2,128 பேர் குடும்பங்களுக்கும் கருணையின் அடிப்படையில் நிவாரணம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

  பஞ்சாயத்து தேர்தல் பணிகளுக்கான பயிற்சி, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகிய 30 நாட்களுக்குள் கொரோனா வந்து இறந்த ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அலகாபாத் நீதிமன்றத்தில் பஞ்சாயத்து தேர்தல் வேண்டாம் என்று தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முந்தைய உயர் நீதிமன்ற உத்தரவின் படி பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டதில் 2128 ஊழியர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: