Home /News /national /

பொருளாதாரம் வீழ ஆங்கிலேயர்களும், முகலாயர்களுமே காரணம்: யோகி ஆதித்யநாத்

பொருளாதாரம் வீழ ஆங்கிலேயர்களும், முகலாயர்களுமே காரணம்: யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

  • Last Updated :
இந்திய பொருளாதாரம் சரிந்ததற்கு ஆங்கிலேயர்களும், முகலாய அரசர்களுமே காரணம் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற உலக இந்து பொருளாதார அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், முகலாயர்கள் ஆட்சிக்கு முன்பு இந்தியா, உலகின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரத்தை கொண்டிருந்ததாகவும், ஆங்கிலேயர் ஆட்சியின் போது அது ஐந்தில் ஒரு பங்காக குறைந்து விட்டதாகவும் கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4 விழுக்காடு மட்டுமே இருந்ததாகவும், தற்போதைய மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை உறுப்பினர் ஓவைசி, எந்த ஒரு விஷயம் குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்பதை ஆதித்யநாத் நிரூபித்துள்ளார் என கூறியுள்ளார்.

Published by:Yuvaraj V
First published:

Tags: Indian economy, Yogi adityanath

அடுத்த செய்தி