Home /News /national /

‘மண்டேலா’ பட பாணியில் சுவாரஸ்யம்.. ₹ 44 லட்சத்துக்கு ஏலம் போன கிராம தலைவர் பதவி

‘மண்டேலா’ பட பாணியில் சுவாரஸ்யம்.. ₹ 44 லட்சத்துக்கு ஏலம் போன கிராம தலைவர் பதவி

Mandela

Mandela

ஏலத்தின் மூலம் கிராம தலைவர் தேர்வாகியிருப்பதால் வாக்காளர்களுக்கு மது வாங்கி தருவது, முன்விரோதம், வாக்குக்கு பணம் கொடுப்பது போன்ற சிக்கல்கள் இல்லாமல் போகும் என கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நடிகர் யோகி பாபுவின் மண்டேலா பட பாணியில் ₹ 44 லட்சத்துக்கு கிராம தலைவர் ஏலம் விடப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

    நடிகர் யோகி பாபு நடித்து சமீபத்தில் வெளிவந்த மண்டேலா திரைப்படத்தில் யோகி பாபுவின் ஒரு தேர்தல் வாக்கு யாருக்கு என இருவருக்கு இடையே ஏலம் நடத்தப்படும். அந்த ஒரு வாக்குக்காக கோடிக்கணக்கில் ஏலம் நடைபெறுவதாக இருக்கும் அக்காட்சி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

    அந்த சுவாரஸ்யத்தை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஆனால் ஒரு வாக்குக்காக அல்லாமல் கிராம தலைவர் யார் என்பதனை ஏலம் மூலம் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இந்த முறை தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வருவது தான் என்றாலும் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றிருக்கும் இந்த நிகழ்வு பரபரப்பாக மாறியிருக்கிறது.

    Watch Mandela | Netflix
    Mandela


    மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சுறுசுறுப்படைந்துள்ளன. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இப்போதே மறைமுக காய்நகர்த்தல்களை வேட்பாளர்கள் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள பதவுளி கிராம பஞ்சாயத்துக்கான தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதனை ஏலம் மூலம் முடிவெடுத்துள்ளனர். 5 பேர் தேர்தலில் போட்டியிட முடிவாகியிருந்த நிலையில், இவர்களில் யார் கிராம தலைவர் என்பதை ஏலம் மூலம் தேர்ந்தெடுப்பதென ஊரார் முடிவெடுத்து அங்குள்ள கோவிலில் ஏலம் நடத்தியிருக்கின்றனர்.



    21 லட்ச ரூபாய் அடிப்படை விலை என நிர்ணயித்து நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் 44 லட்ச ரூபாய் தருவதாக ஏலம் கோரிய சுபாக் நிங் யாதவ் என்பவரை கிராம தலைவராக்க கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர். அவருக்கு மாலையணிவித்து ஊர்க்காரர்கள் மரியாதை செலுத்தினர். தற்போது ஏலம் எடுத்துள்ள யாதவிற்கு எதிராக வேறு யாரும் மனுதாக்கல் செய்யமாட்டார்கள் என்பதால் அவர் தேர்தலில் போட்டியின்றி வெற்றிபெற்றுவிடுவார்.

    ஏலத்தின் மூலம் கிராம தலைவர் தேர்வாகியிருப்பதால் வாக்காளர்களுக்கு மது வாங்கி தருவது, முன்விரோதம், வாக்குக்கு பணம் கொடுப்பது போன்ற சிக்கல்கள் இல்லாமல் போகும் என கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் யாதவ் தான் தருவதாக கூறிய 44 லட்சத்தை உரிய நேரத்திற்குள் செலுத்தாமல் போனால், அவருக்கு அடுத்ததாக அதிக தொகை கோரியவருக்கு கிராம தலைவர் பதவி சென்றுவிடும் என கிராம கமிட்டியினர் தெரிவித்தனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Comedy actor Yogi Babu, Madhya pradesh, Yogi babu

    அடுத்த செய்தி