Home /News /national /

தந்தை இறக்கும் முன் அவரைப் பார்க்க மனம் துடித்தது, ஆனால் மாநிலத்தின் 23 கோடி மக்கள் நலன் தான் முக்கியம்- யோகி ஆதித்யநாத்

தந்தை இறக்கும் முன் அவரைப் பார்க்க மனம் துடித்தது, ஆனால் மாநிலத்தின் 23 கோடி மக்கள் நலன் தான் முக்கியம்- யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது தாயார் சாவித்திரி தேவியிடம் ஆசி பெற்றார்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது தாயார் சாவித்திரி தேவியிடம் ஆசி பெற்றார்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல்வராகப் பதவியேற்ற பிறகு, தனது தாயார் மற்றும் உறவினர்களைச் சந்திக்க, முதல் முறையாக, பவுரி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பஞ்சூருக்கு மே 3ஆம் தேதி சென்றார்.

    அவரது கிராமத்திற்குச் சென்ற பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது தாயின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்குவதைக் காணும் படத்தையும் ட்வீட் செய்தார்.

    ஏப்ரல் 21, 2020 அன்று ஹரித்வாரில் நடந்த அவரது தந்தை ஆனந்த் பிஸ்த்தின் இறுதிச் சடங்கில் கூட யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ள முடியவில்லை. காரணம் நாடு முழுதும் இருந்த கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளே.

    இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறும்போது, “இறுதி நேரத்தில் என் தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற தீவிர ஆசை எனக்கு இருந்தது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயின் போது மாநிலத்தின் 23 கோடி மக்களுக்கான கடமை உணர்வைத் தொடர்ந்து, என்னால் என் தந்தையைப் பார்க்க முடியவில்லை” என்றார் யோகி.

    மேலும் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ஒரு குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக ஆதித்யநாத் தன் கிராமத்துக்கு முதல் முறையாக பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்” என்று கூறினார்.

    ஆதித்யநாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், பொதுக்கூட்டங்களில் பேசவும் வந்தாலும், தனது பூர்வீக கிராமத்திற்கு செல்வது இதுவே முதல்முறை.

    அவர் தனது கிராமத்தில் இரவைக் கழித்து, புதன்கிழமை தனது குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார். வந்தவுடன் பக்கத்து கிராமங்களில் இருந்து அவரது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் சூழ, யோகி ஆதித்யநாத் முதலில் தனது குடும்பத்தின் இளைய உறுப்பினர்களிடம் அளவளாவி அவர்களுக்கு சாக்லேட்களை வழங்கினார்.

    முன்னதாக யம்கேஷ்வரில் உள்ள பித்யானியில் உள்ள மகாயோகி குரு கோர்கநாத் அரசு கல்லூரியில் தனது ஆன்மீக குரு மஹந்த் அவைத்யநாத்தின் சிலையை திறந்து வைக்கும் போது முதல்வர் யோகி ஆதித்யநாத் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார்.

    ஆதித்யநாத் தனது பள்ளி ஆசிரியர்களுக்கு விழாவில் ஒவ்வொருவருக்கும் சால்வை வழங்கி கவுரவித்ததுடன், இறந்து போன ஆசிரியர்களையும் மறக்காது நினைவு கூர்ந்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Yogi adityanath

    அடுத்த செய்தி