உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று மீண்டும் பதவியேற்கிறார். அமித் ஷா தலைமையில் நடந்த
பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், பாஜக சட்டமன்ற குழு தலைவராக யோகி ஆதித்யநாத் நேற்று தேர்வானார்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் 255 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த மாநில முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்கவுள்ளாா்.
லக்னோவில் உள்ள அடல்பிஹாரி வாஜ்பாய் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை.. அமைச்சர் ஜெய்சங்கருடன் முக்கிய ஆலோசனை!
யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் 50,000 போ் வரை அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழா பாதுகாப்புக்காக 8,000 போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். இது தவிர பிரத்யேக கண்காணிப்பு கேமராக்களும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.