ஹோம் /நியூஸ் /இந்தியா /

மாவட்டங்கள் முழுவதும் பசு கொட்டகைகளின் தரத்தை ஆய்வு செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவு!

மாவட்டங்கள் முழுவதும் பசு கொட்டகைகளின் தரத்தை ஆய்வு செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவு!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

பசுவின் சிறுநீரும், சாணமும் உரமாக பாதுகாக்கப்பட வேண்டும். பின்னர், அது விற்பனை செய்யப்படும். மற்ற பொருள்களும் விற்பனை செய்யப்படும்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்பு அமைப்புடன் நடைபெற்றக் கூட்டத்தில் பசுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. அவருடைய பசு பாதுகாப்பு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. இன்று, முதல்வர் யோகி ஆதித்யநாத், பசு பாதுகாப்பு அமைப்புடன்(Gau Sewa Aayog) ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது, ‘ஆவணங்களுடன் பசுக்களை எடுத்துச் செல்பவர்களுக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். சட்டவிரோதமாக பசுக் கடத்தலில் ஈடுபடுபவர்களைச் சேர்ந்த பசு பாதுகாப்பு அமைப்பு சோதனை செய்யவேண்டும். பசு முகாம்களில் பசு பாதுகாப்பு அமைப்பு அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். பசுப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. பசு முகாம்கள் பொருளாதார ரீதியாக சுயமாக செயல்படவேண்டும்.

பசுவின் சிறுநீரும், சாணமும் உரமாக பாதுகாக்கப்பட வேண்டும். பின்னர், அது விற்பனை செய்யப்படும். மற்ற பொருள்களும் விற்பனை செய்யப்படும். பசு பாதுகாப்பு அமைப்பு ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று, பசு முகாம் எந்த நிலைமையில் உள்ளது.

மாட்டுக் கொட்டகை, எந்தப் பொருளால் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யவேண்டும். பசுக்களை வைத்திருக்கும் விவசாயிகளை, அதனை பொருளாதார ரீதியாக பயன்படுத்தவில்லையென்றால், ஒரு பசு மாட்டுக்கு உணவுக்கு 30 ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published:

Tags: Yogi adityanath