ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி விற்பனை செய்தால் நடவடிக்கை : யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி விற்பனை செய்தால் நடவடிக்கை : யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

யோகி ஆதித்யநாத்

கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தைப் பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • Share this:
  கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தைப் பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  நாடு முழுவதும் கொரேனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்பப்டு வரும், ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் பதுக்கி விற்பனை செய்தால், அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  உத்தர பிரதேசத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், லக்னோவில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில், உத்தரப் பிரதேசத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டது.

  ஆக்சிஜன் கொண்டுவரும் டேங்கர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும், ஆக்சிஜன் வழங்கும் நிறுவனங்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

  மாநிலத்தில் ரெம்டெசிவர், ஃபேரிப்ளூ மருந்துகளை கள்ளச்சந்தையில் பதுக்குவோர் மற்றும் விற்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுவை காவல்துறை டிஜிபி உருவாக்கவும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

  Must Read : அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.. இல்லையெனில் விவேக் ஆன்மா ஏற்றுக் கொள்ளாது.. புதுச்சேரியில் தமிழிசை வேண்டுகோள்

   

  அதன்படி, கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளைப் பதுக்குவோர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டம், குண்டாஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று யோகி ஆதித்தயநாத் உத்தரவிட்டார்.
  Published by:Suresh V
  First published: