Home /News /national /

Exclusive | மோடிதான் எங்கள் பாதுகாவலர்: அவருடன் கருத்து முரண்பாடு இல்லை- யோகி ஆதித்யநாத்

Exclusive | மோடிதான் எங்கள் பாதுகாவலர்: அவருடன் கருத்து முரண்பாடு இல்லை- யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடிதான் எங்களுடைய பாதுகாவலர் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதன்பின்னர், நியூஸ்18 தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘பிரதமர் மோடிதான் எங்களது பாதுகாவலர். என்னுடைய பாதுகாவலருடன் எனக்கு எந்த கருத்து முரண்பாடும் இல்லை. நாங்கள் எல்லோரும் பிரதமர் மோடியின் வழிநடத்தலில் வேலை செய்கிறோம்.

    மோடிதான் எங்களுடைய வழிகாட்டி. பிரதமர் மோடி போன்ற ஒரு தலைவர், இந்த நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். பிரதமர் மோடிக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய தலைவர். என்னுடைய வேட்புமனுத் தாக்கலுக்கு அமித்ஷா வந்ததற்கு நன்றி. எல்லோருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிமை உள்ளது. ஆனால், எத்தனை பேருடைய இறுதி அத்தியாயம் பிரியங்கா காந்தியுடன் இணைந்து சேர்ந்து எழுதப்படப்போகிறது என்பதைப் பார்க்கப்போகிறோம். காங்கிரஸின் தலையெழுத்து மார்ச் 10-ம் தேதி மூடப்படும்.

    கைரேனா வெளியேற்ற விவகாரத்தின் காரணமாக சமாஜ்வாடி கட்சியை எந்த மக்களுக்கும் மன்னிக்க மாட்டார்கள். 2019-ம் ஆண்டு தேர்தலில் எல்லோருடைய கருத்துக் கணிப்பும் தவறு என்று நிரூபிக்கப்பட்டது. சமாஜ்வாடி கட்சி வன்முறையின் மீது நம்பிக்கைவைத்துள்ளது. ராமரின் பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் காரணமாக யாரும் சமாஜ்வாடியை மன்னிக்க மாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Modi, Uttar pradesh, Yogi adityanath

    அடுத்த செய்தி