ஹோம் /நியூஸ் /இந்தியா /

மாயாவதியா? முலாயம்சிங்கா? அகிலேஷுக்கு யோகி ஆதித்யநாத் கேள்வி

மாயாவதியா? முலாயம்சிங்கா? அகிலேஷுக்கு யோகி ஆதித்யநாத் கேள்வி

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

அகிலேஷ் யாதவ்வும், மாயாவதியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, மாயாவதி பிரதமராக ஆதரவு தருகிறீர்களா? என்று அகிலேஷ் யாதவ்விடம் கேள்வி எழுப்பப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பிரதமர் வேட்பாளருக்கு அகிலேஷ் யாதவ் மாயாவதியை முன்னிறுத்துவாரா அல்லது முலாயம்சிங்கை முன்னிறுத்துவாரா என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை எதிர் கொள்ள பகுஜன்சமாஜும், சமாஜ்வாடியும் கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியான நிலையில், நேற்று அகிலேஷ் யாதவ்வும், மாயாவதியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, மாயாவதி பிரதமராக ஆதரவு தருகிறீர்களா? என்று அகிலேஷ் யாதவ்விடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் பிரதமராக வருவதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்று தெரிவித்தார். இதுகுறித்து தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘பிரதமர் பதவிக்கு தந்தை முலாயம் சிங் யாதவை நிறுத்துவாரா? அல்லது மாயாவதியை நிறுத்துவாரா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகிலேஷ் யாதவ், அவரது தந்தை முலாயம் சிங் யாதவை பிரதமராக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த முறை பிரதமர் வேட்பாளர் யார்? முலாயம்சிங் யாதவா? அல்லது மாயாவதியா? இதை அகிலேஷ் யாதவ் விளக்க வேண்டும். இந்த முறை சமாஜ்வாடி கட்சி முலாயம்சிங் யாதவுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்குமா? என்பது தெளிவாக தெரியவில்லை.

பகுஜன் சமாஜ்- சமாஜ் வாடி கூட்டணி ஊழல், சாதி கண்ணோட்டத்துடன் செயல்படும் அதிகார கூட்டணியாகும். இந்த கூட்டணியால் உத்தரபிரதேச மாநில அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது. இந்த இரு கட்சிகளும் ஓர் அணியில் இணைந்தது பா.ஜ.கவுக்கு சாதகமாகத்தான் அமையும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published:

Tags: Uttar pradesh, Yogi adityanath