வீடு வழங்கும் திட்டத்தில் 35% இஸ்லாமியர்கள் பயனடைந்துள்ளனர்! யோகி ஆதித்யநாத் விளக்கம்

ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர். அரசுத் திட்டங்கள் எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாருக்கும் சென்றடைய வேண்டும்.

news18
Updated: September 18, 2019, 10:56 PM IST
வீடு வழங்கும் திட்டத்தில் 35% இஸ்லாமியர்கள் பயனடைந்துள்ளனர்! யோகி ஆதித்யநாத் விளக்கம்
யோகி ஆதித்யநாத்
news18
Updated: September 18, 2019, 10:56 PM IST
நாங்கள் 25 லட்சம் பேருக்கு வீடுகள் வழங்கியுள்ளோம். அதனை இந்துக்களுக்கு மட்டும் வழங்கவில்லை. அதில், 35% இஸ்லாமியர்களும் பயனடைந்துள்ளனர் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு, மக்கள் தொகைப் பெருக்கம், அயோத்தி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரத்யேக பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில், ‘மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. நம்மிடம் எத்தகைய வளங்கள் உள்ளதோ அதனுடைய தரத்து அதிகபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட வேண்டியவை. உங்களால் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எந்த முன்னேற்றம் இருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது பிரச்னைதான்.


வளர்ச்சியை சரியாக வைத்திருக்கவேண்டும் என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். மக்கள் தொகைக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. மக்கள் தொகைக்கட்டுப்பாடு குறித்து தேவைப்படும்போது உரிய நடவடிக்கை எடுப்போம். ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர். அரசுத் திட்டங்கள் எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாருக்கும் சென்றடைய வேண்டும். எல்லாருக்குமான வளர்ச்சி என்பதுதான் எங்களுடைய நோக்கம். நாங்கள் 25 லட்சம் வீடுகள் வழங்கியுள்ளோம் என்றால், அது இந்துக்களுக்கு மட்டும் வழங்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் 18% இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் 30-35% இஸ்லாமியர்கள் பயனடைந்துள்ளனர். ஆமாம். அவர்களுக்கு இரட்டிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களுக்கு சலுகைகள் தேவைப்படுகின்றன. நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காக அவர்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை. நாங்கள் ஒரு வரையறை வைத்துள்ளோம். அந்த வரையறைக்குள் வரும் அனைவரும் சலுகைகள் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

Also see:

Loading...

First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...