அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பின்பற்றுவோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு, மக்கள் தொகைப் பெருக்கம், அயோத்தி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரத்யேக பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில், ‘நீதிமன்றத்தின் முன் சமர்பிக்கப்படும் வரலாற்று ஆதாரங்கள் அடிப்படையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு இருக்கும். எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். நான் உறுதியாக இருக்கிறேன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் அமல்படுத்துவோம். நாங்கள் எப்போதும், நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிக்கிறோம்.
அதனைச் செயல்படுத்துகிறோம். அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு இஸ்லாமியர்கள் தரப்பு முன்வந்திருந்தால் அது இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், துரோதிருஷ்டவதமாக மத்தியஸ்தம் செய்வது தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து சண்டையிடுபவர்களுக்கு பொதுவான இலக்கு இல்லாத நிலையில் மத்தியஸ்தம் செய்ய முடியாமல் போனது. இருதரப்பினரும் பிடிவாதமாகவும், இணைந்து பணியாற்றவும் மறுத்ததால் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. நாளுக்கு நாள் நடைபெறும் விசாரணை எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்தப் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Yogi adityanath