Home /News /national /

பிரதமர் மோடியுடன் - யோகி ஆதித்யநாத் சந்திப்பு... பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு

பிரதமர் மோடியுடன் - யோகி ஆதித்யநாத் சந்திப்பு... பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு

உத்தரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்ற சாதனையை பாஜக ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு ஆதித்யநாத் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

    இதேபோன்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரையும் யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசினார்.

    உத்தரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்ற சாதனையை பாஜக ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10-ம்தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமாக செய்வதாக கூறி, கவர்னர் ஆனந்திபென் படேலிடம் கடிதம் அளித்தார்.

    இதையும் படிங்க - உக்ரைன் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

    இந்நிலையில் மீண்டும் அமையவுள்ள பாஜக அரசில் ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் பொறுப்பேற்க உள்ள அமைச்சர்கள் குறித்த பட்டியல் தயார் நிலையில் உள்ளது.

    உத்தப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக 255 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளம் 12 தொகுதிகளையும், நிஷாத் கட்சி 6 தொகுதிகளையும் கைப்பற்றியது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது பாஜக 57 தொகுதிகளை இழந்துள்ளது.

    இதையும் படிங்க - ஐந்து மாநில முதலமைச்சர்கள் பதவியேற்பு எப்போது? மூன்று மாநிலங்களில் பா.ஜ.கவில் குழப்பம்

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 111 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது அக்கட்சி 64 தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022, Modi, Yogi adityanath

    அடுத்த செய்தி