உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் விமானம் இன்று பாதுகாப்பு காரணங்களுக்காக அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அம்மாநிலத்தின் வாரணாசிக்கு நேற்று பயணம் செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்தார். தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இன்று வாரணாசியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் லக்னோவுக்கு செல்ல புறப்பட்டார். ஹெலிகாப்டர் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, திடீரென அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பறவை மோதியதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. பறவை மோதியதை அறிந்ததும் விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க கோரிக்கை வைத்து பத்திரமாக வாரணாசியின் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் தரையிறக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
#BREAKING | UP CM Yogi Adityanath's chopper had to make an emergency landing. This was after a bird hit the chopper.@pranshumisraa with more details.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவுசல்ராஜ் சர்மா கூறுகையில், 'லக்னோ செல்லவிருந்த முதலமைச்சரின் ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் உடனடியாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத் மற்றொரு அரசு விமானத்தில் லக்னோ புறப்பட்டார். சம்பவம் காரணமாக எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை' என்றார்.
Published by:Kannan V
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.