இந்திய ராணுவத்தை ‘மோடியின் படை’ என்று குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத்!

காங்கிரஸ் கட்சியும் யோகியின் கருத்து ராணுவத்தை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தை ‘மோடியின் படை’ என்று குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத்!
யோகி ஆதித்யநாத்
  • News18
  • Last Updated: April 1, 2019, 1:44 PM IST
  • Share this:
இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் படை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச, எதிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜகவின் தேர்தல் பரப்புரைகளில் ராணுவம், தேசப்பற்று ஆகியவை குறித்து அதிகமாக பேசப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் பிரசாரம் மேற்கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய ராணுவத்தை பிரதமர் மோடியின் படை என்று குறிப்பிட்டார்.


“காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகளுக்கு பிரியானி கொடுத்து உபசரித்தது. ஆனால், மோடியின் படைகள் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கொடுத்துள்ளது” என்று ஆதித்யநாத் பேசினார்.

யோகியின் இந்த பேச்சை குறிப்பிட்டுள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, “இந்திய ராணுவத்தை இப்படி இழிவுபடுத்தக்கூடாது. ராணுவம் அனைவருக்குமானது. நாட்டின் சொத்து. யோகியின் கருத்துகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் யோகியின் கருத்து ராணுவத்தை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.Read Also....

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறைக்குச் சென்றவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்!

கட்டணம் செலுத்தாத பார்வையற்ற சிறுவன்! இரண்டு மணி நேரம் வெயிலில் நிற்கவைத்த பள்ளி நிர்வாகம்

விதிகளை மீறியதால் தடுத்த அதிகாரி... ஆத்திரமடைந்த மத்திய அமைச்சர்...!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

See Also...
First published: April 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்