• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கிம்பூர்கேரியில் கொல்லப்பட்ட பாஜக பிரமுகரின் குடும்பத்தை சந்தித்ததற்காக விவசாயிகளின் போராட்ட குழு தலைவர் சஸ்பெண்ட்!

லக்கிம்பூர்கேரியில் கொல்லப்பட்ட பாஜக பிரமுகரின் குடும்பத்தை சந்தித்ததற்காக விவசாயிகளின் போராட்ட குழு தலைவர் சஸ்பெண்ட்!

Yogendra yadav

Yogendra yadav

32 விவசாய சங்கங்கள் யோகேந்திர யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கிய நிலையில் தான் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
லக்கிம்பூர்கேரியில் விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டு உயிரிழந்த பாஜக பிரமுகரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியதற்காக விவசாய போராட்டக்குழு தலைவர்களுள் ஒருவரான யோகேந்திர யாதவ், போராட்டுக் குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 3ம் தேதி, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா, துணை முதல்வர் கேசவ் பிரசாய் மெளர்யா ஆகியோரின் வருகையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விவசாயிகளின் மீது வேகமாக வந்த கார் மோதியதில் விவசாயிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மோதிய காரை தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்தவர்களை அடித்து துடிதுடிக்க கொலை செய்தனர். இந்த வன்முறையில் விவசாயிகள், பாஜகவினர், பத்ரிகையாளர் ஒருவர் என 8 பேர் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், விவசாயிகள் மீது மோதிய காரின் உரிமையாளரான மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Also read: மேற்குவங்கத்தில் ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா பரவல்!

இதனிடையே லக்கிம்பூர்கேரி வன்முறையில் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் ஷுபம் மிஸ்ராவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார், விவசாயிகள் போராட்டக் குழுவின் முக்கிய உறுப்பினரும், எழுத்தாளர், செயற்பாட்டாளர், அரசியல்கட்சியின் தலைவர் என பன்முகம் கொண்ட யோகேந்திர யாதவ். பாஜகவினருக்கு எதிராக விவசாயிகள் போராடிவரும் நிலையில் யோகேந்திர யாதவ், கொல்லப்பட்ட பாஜக பிரமுகரின் குடும்பத்தினரை சந்தித்தது போராட்டக் குழுவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.



இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வரும் 46 விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா, யோகேந்திர யாதவை சஸ்பெண்ட் செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் அமைப்பின் முடிவுகளை எடுக்கும் கமிட்டியில் இருந்து யோகேந்திர யாதவ் ஒரு மாதத்துக்கு நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் 32 விவசாய சங்கங்கள் யோகேந்திர யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கிய நிலையில் தான் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Also read:  ரூ.100ஐ தொட்டது டீசல் விலை.. பெட்ரோல் விலை இன்றும் (அக்டோபர் 23) ஏறுமுகம்!

இதனிடையே தனது சஸ்பெண்ட் நடவடிக்கையை ஏற்பதாக தெரிவித்துள்ள யோகேந்திர யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துக்கத்தை பகிர்ந்து கொள்வது மனிதநேய மற்றும் இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடு, இது பெரும் போராட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் என்பதே என்னுடைய எண்ணம். இருப்பினும் கலந்தாலோசிக்காமல் நான் சென்றது தவறு தான். இது போன்ற மிகவும் சென்ஸிடிவ் ஆன விஷயங்களில் தனிப்பட்ட புரிதலை கடந்து ஒருங்கிணைந்த ஞானம் தேவை என நான் நினைக்கிறேன் என அவர் குறிப்பிட்டிருந்தார்

யோகேந்திர யாதவ் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, பின்னர் 2016ல் ஸ்வராஜ் இந்தியா என்ற தனிக்கட்சியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: