பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் போதைப்பொருட்கள் உட்கொள்வதாக யோகா குரு பாபா ராம்தேவ் குற்றச்சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்யவீரன் மற்றும் வீராங்கனை மாநாட்டில் அவர் பேசிய பாபா ராம் தேவ், சல்மான் கான் போதைப்பொருள் உட்கொள்கிறார், அமீர்கான் பற்றி எனக்குத் தெரியாது. ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப்பொருள் வழக்கில் பிடிபட்டு சிறையில் உள்ளது. நடிகைகளைப் பொறுத்தவரை கடவுள் ஒருவரே அவர்களைப் பற்றி அறிவார் என பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், திரையுலகம் முழுவதும் போதை இருக்கிறது, அரசியலிலும் போதை இருக்கிறது, தேர்தல் நேரத்தில் மது வினியோகம் செய்யப்படுகிறது, போதையில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று தீர்மானம் எடுக்க வேண்டும். இதற்காக இயக்கம் நடத்துவோம் என பாபா ராம்தேவ் தெரிவித்தார்.
Also Read: பெண்ணை கடித்துக் குதறிய பிட்புல் நாய்.. உடம்பெல்லாம் 50 தையல்கள்! பகீர் சம்பவம்!
போதைப்பொருளுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கும் போது, போதைப்பொருள் திரையுலகம் முழுவதும் மற்றும் அரசியலிலும் உள்ளது என்று கூறினார். ராம்தேவ் பேசிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baba Ramdev, Drug addiction, Salman khan