ஹோம் /நியூஸ் /இந்தியா /

கணவர் சண்டையை சரிசெய்ய மந்திரவாதி உதவி.. பெண்ணை நரபலி கொடுக்க முயற்சி.. கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி!

கணவர் சண்டையை சரிசெய்ய மந்திரவாதி உதவி.. பெண்ணை நரபலி கொடுக்க முயற்சி.. கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கேரளாவின் திருவல்லா பகுதியில் மேலும் ஒரு நரபலி முயற்சி சமீபத்தில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரு நரபலி கொடுத்த பகீர் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்குள்ள எர்ணாகுளத்தில் லாட்டரி விற்று தொழில் செய்து வந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களை திருவல்லா பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் பகவல்சிங் - லைலா தம்பதியும், போலி மந்திரவாதி முகமது ஷபி ஆகிய சதித்திட்டம் தீட்டி நரபலி கொடுத்துள்ளனர். இந்த சதி சம்பவம் பல மாதங்களுக்கு பின்னர் அம்பலமான நிலையில், மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இதே திருவல்லா பகுதியில் மேலும் ஒரு நரபலி முயற்சி சமீபத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரளாவின் கொச்சி பகுதியில் வசித்துவந்துள்ளார். திருமணமான இந்த பெண்ணுக்கு கணவருடன் பிணக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பெண் கணவரை பிரிந்து இருந்த நிலையில், தங்கள் சண்டைக்கு தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தை சில நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார்.இதை கேட்ட ஒரு நண்பர் திருவல்லாவில் ஒரு மந்திரவாதி உள்ளார். அவரை சந்தித்து பேசினால் பிரச்னை நிச்சயம் தீரும் என்றுள்ளார்.

நண்பரின் கருத்தை ஏற்றுக்கொண்ட அந்த பெண் டிசம்பர் 8ஆம் தேதி கொச்சியில் இருந்து கிளம்பி திருவல்லாவில் உள்ள குட்டப்புழா என்ற பகுதியில் மந்திரவாதியை சென்று பார்த்துள்ளார். அந்த மந்திரவாதி பெண்ணுக்கு சில சடங்குகளை செய்துள்ளார். பின்னர், அந்த பெண்ணை நரபலி கொடுத்து விடலாம் என்று நண்பரும் மந்திரவாதியும் ரகசியமாக பேசி திட்டம் தீட்டியுள்ளனர். இதை அந்த பெண் ஒட்டுக்கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையும் படிங்க: பிகினி பெண்கள்தான் குறி.. தொடர் கொலைகள்.. விடுதலையாகும் ரியல் ’ராட்சசன்’ சீரியல் கில்லர்!

பின்னர் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தப்பி வந்த பெண், சில நாள்கள் பயந்துபோய் தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர் தற்போது தைரியத்தை வரவழைத்து நண்பர்களின் உதவியுடன் காவல்துறையிடம் இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்த காவல் துறை ஏடிஜிபிக்கு விசாரணை அறிக்கை தந்துள்ளனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகிறது. மீண்டும் கேரளாவில் நரபலி குற்ற சம்பவம் முயற்சி நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Crime News, Human Sacrifice, Kerala, Superstition