அதிரடி தாக்குதல் ஏன்? வெளியுறவுத்துறை செயலர் விளக்கம்

ந்தியா வலியுறுத்தியும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மற்றொரு தீவிரவாத தாக்குதலை தடுக்கவே, விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது என்று விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

அதிரடி தாக்குதல் ஏன்? வெளியுறவுத்துறை செயலர் விளக்கம்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 3 பகுதிகளில் இந்திய விமானப்படை இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
  • News18
  • Last Updated: February 26, 2019, 12:32 PM IST
  • Share this:
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 3 பகுதிகளில் இந்திய விமானப்படை இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை அடுத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது. 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Read Also... இந்திய போர் விமானத்தை கண்டு பின்வாங்கிய பாகிஸ்தானின் போர் விமானம்!


இந்த தாக்குதலில், 300 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டுள்ளது. விமானப்படைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், “புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 41 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமான மசூத் அஸார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு தூதரக ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது.

Read Also... 1971-க்கு பிறகு பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவிய இந்திய விமானப்படை!ஐநா அமைப்பால் தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு ஏற்கனவே இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 3 பகுதிகளில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இயக்கத்தின் தீவிரவாதிகள், பயிற்றுனர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப்படையினர் அழிக்கப்பட்டுள்ளனர். மசூத் அஸாரின் உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியா வலியுறுத்தியும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மற்றொரு தீவிரவாத தாக்குதலை தடுக்கவே, விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

Also See...

First published: February 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading