Home /News /national /

பிரியங்கா காந்தியிடம் ஓவியம் வாங்கினால் பத்ம பூஷண் விருது - யெஸ் வங்கி நிறுவனர் பரபரப்பு வாக்குமூலம்

பிரியங்கா காந்தியிடம் ஓவியம் வாங்கினால் பத்ம பூஷண் விருது - யெஸ் வங்கி நிறுவனர் பரபரப்பு வாக்குமூலம்

பிரியங்கா காந்தியிடம் இருந்த  ஓவியத்தை தன்னை கட்டாயப்படுத்தி வாங்க வைத்ததாக யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரியங்கா காந்தியிடம் இருந்த ஓவியத்தை தன்னை கட்டாயப்படுத்தி வாங்க வைத்ததாக யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரியங்கா காந்தியிடம் இருந்த ஓவியத்தை தன்னை கட்டாயப்படுத்தி வாங்க வைத்ததாக யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சட்டவிரோத நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யெஸ் வங்கி நிறுவனத்தின் இணை நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் உள்ள ராணா கபூர் அமலாக்கத்துறைக்கு அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

    ராணா கபூர் அளித்த வாக்குமூலத்தை அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிக்கையில் பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிக்கையில், ராணா கபூர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வைத்திருந்த பிரபல ஓவியர் எம்எஃப் ஹுசைனின் ஓவியத்தை கட்டாயப்படுத்தி வாங்க வைத்ததாக பகிரங்க புகார் தெரிவித்துள்ளார். தான் கட்டாயப்படுத்தப்பட்டு  வாங்கிய ஓவியத்தின் பணத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    ராணா கபூர் அமலாக்கத்துறைக்கு அளித்த வாக்குமூலத்தின் படி, அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் பொட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா பிரியங்கா காந்தியிடம் இருந்து ஓவியத்தை வாங்க தன்னை கட்டாயப்படுத்தினார். ஒரு வேளை ஓவியத்தை வாங்கவில்லை என்றால் தேவையில்லாத பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார். இதையடுத்து ரூ.2 கோடி காசோலை கொடுத்து தான் ஓவியத்தை வாங்கியதாகவும், அந்த தொகையை சோனியா காந்தி நியூயார்க்கில் மேற்கொள்ளும் மருத்துவ செலவுக்கு தான் பயன்படுத்துவோம் என முரளி தியோராவின் மகன் மிலந்த் தியோரா தன்னிடம் கூறியதாகவும் ராணா கபூர் தெரிவித்துள்ளார்.

    அத்துடன், சோனியா காந்தியின் விசுவாசியான அகமது பட்டேல், சோனியா காந்தி குடும்பத்திற்கு ராணா கபூர் உதவி செய்யும் பட்சத்தில், அவருக்கு பத்ம பூஷண் விருது தர பரிசீலனை செய்யப்படும் என கூறியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பூமிக்குள் பணம்.. சுவருக்குள் வெள்ளி... அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர்

    இந்த ஓவியத்தை வாங்க மிலாந்த் தியோரா தனது வீட்டிற்கு பல முறை வந்தும், செல்போன் கால்கள், மெசேஜ்கள் மூலம் பல முறை வற்புறுத்தியதாகவும் ராணா கப்பூர் அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார். தனக்கு இந்த ஓவியத்தை வாங்க விரும்பம் இல்லை என்பதால், இந்த டீலை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என தான் முயற்சித்ததாகவும், ஆனால் இரு வலிமையான குடும்பங்களின் விரோதத்தை தான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. எனவே, எனது HSBC வங்கி கணக்கின் மூலம் ரூ.2 கோடி காசோலை வழங்கி இந்த ஓவியத்தை வாங்கினேன் என அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் ராணா கபூர் கூறியுள்ளார்.

    யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மற்றும் DHFL நிறுவனத்தின் ப்ரமோட்டர்ஸ் கபில் மற்றும் தீரஜ் வத்வான் ஆகியோர் ரூ.5,050 கோடி மதிப்பில் மோசடியான நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அமலாக்கத்துறை மூவரையும் கைது செய்துள்ளது. இந்த மூவரும் சிறையில் விசாரணை கைதிகளாக உள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Enforcement Directorate, Priyanka gandhi

    அடுத்த செய்தி