• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • யெஸ் வங்கி விவகாரம்: ராணா கபூரின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு..!

யெஸ் வங்கி விவகாரம்: ராணா கபூரின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு..!

ராணா கபூர்

ராணா கபூர்

ராணா கபூருக்கு சொந்தமான மும்பை, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    யெஸ் வங்கியின் முன்னாள் நிறுவனர் ராணா கபூரின் அமலாக்கத்துறை காவல் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    வாராக்கடன் பிரச்சினையில் ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியின் செயல்பாட்டை முடக்கியது. வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை கடந்த 8-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

    அதனைத் தொடர்ந்து, யெஸ் வங்கியின் வாராக்கடன் பிரச்னைக்கு காரணமான ராணா கபூர், அவரது மனைவி, மகள்கள் மூவர் என அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன.

    ராணா கபூருக்கு சொந்தமான மும்பை, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில், ராணா கபூர் குடும்பத்தின் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை, கடன் உள்ளிட்டவை குறித்து விசாரிப்பதற்காக அவரது காவல் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Also see...

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: