யெஸ் வங்கி நிறுவனர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது ராஜீவ் காந்தியின் ஓவியம்..!

யெஸ் வங்கி நிறுவனர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது ராஜீவ் காந்தியின் ஓவியம்..!

ராணா கபூர்

ராணா கபூருக்கு ப்ரியங்கா காந்தி எழுதிய கடிதம் பறிமுதல்

 • Share this:
  யெஸ் வங்கி முன்னாள் நிறுவனர் ராணா கபூர் வீட்டில் இருந்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஓவியத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  வாராக்கடன், நிதி நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்னைகளில் யெஸ் வங்கி சிக்கித் தவிப்பதற்கு காரணமான அதன் நிறுவனர் ராணா கபூர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தியிடம் இருந்து ராஜீவ் காந்தி ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள ராணா கபூர் வீட்டில் இருந்து ராஜீவ் காந்தி ஓவியத்தை நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  பிரியங்கா காந்தி


  அத்துடன் 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராணா கபூருக்கு ப்ரியங்கா காந்தி எழுதிய கடிதத்தையும் எடுத்துச் சென்றனர்.

  Also see...
  Published by:Vaijayanthi S
  First published: