கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 0.55 சதவீதமாக உயர்ந்துள்ளதால், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரவு ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தியாவசியம் இல்லாத பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு மண்டலத்துக்கு ஒரு வாரச்சந்தை மட்டும், 50 சதவீத வியாபாரிகளுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம்.
மதுபான விடுதிகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Also read... புதுச்சேரிக்கும் பரவியது ஒமைக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!
மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் டாக்சிகளில் 2 பேர் மட்டுமே பயணிக்க முடியும். தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், மசாஜ் சென்டர்கள், பூங்காக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Also read... ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேருக்கு எஸ் ஜீன் மாற்றம்!
திருமண விழா மற்றும் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட டெல்லி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.