கர்நாடகாவில் 3 பேர் துணை முதலமைச்சர்களாக நியமனம்!

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசில் சாதிவாரி பிரதிநிதித்துவப்படி 5 பேர் துணை முதலமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் 3 பேர் துணை முதலமைச்சர்களாக நியமனம்!
எடியூரப்பா
  • News18
  • Last Updated: August 27, 2019, 7:52 AM IST
  • Share this:
கர்நாடகாவில் முதல் முறையாக 3 துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்ற 17 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், எஞ்சிய துறைகள் முதலமைச்சர் எடியூரப்பாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால், கடந்த ஜூலை 26-ம் தேதி பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.

ஆனால் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக அமைச்சரவையை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது.


ஒரு வழியாக பாஜக தலைவர் அமித்ஷாவின் ஒப்புதலை பெற்ற எடியூரப்பா அமைச்சரவையை விரிவு செய்தார். அதன்படி, கடந்த 20-ம் தேதி பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட 17 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில், ஒரு வார தாமதத்திற்குப் பின் அமைச்சர்களாக பொறுப்பேற்ற 17 பேருக்கும் நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இதில் கோவிந்த் மக்தப்பா கார்ஜோல், அஸ்வத் நாராயண், லட்சுமண் சங்கப்பா சவதி ஆகிய 3 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், கர்நாடக சட்டப் பேரவை வரலாற்றில் 3 பேர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். மேலும், துணை முதலமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேருக்கும் இலாகாக்களை முதலமைச்சர் அறிவித்தார்.இதன்படி, கோவிந்த் மக்தப்பா-வுக்கு பொதுப்பணித் துறையும், சமூக நலத்துறை கூடுதல் பொறுப்பாகவும் வழங்கப்பட்டுள்ளன. அஸ்வத் நாராயணன் உயர் கல்வி, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். லட்சுமண் சங்கப்பாவுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன், ஈஸ்வரப்பாவுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும், அசோகாவுக்கு வருவாய் துறையும், முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு தொழில் துறையும் வழங்கப்பட்டுள்ளன.

பசவராஜ் பொம்மை உள்துறை அமைச்சராகவும் சி.சி.பாட்டீலுக்கு சுரங்கம் மற்றும் தொழில் வர்த்தக துறையும், ஒதுக்கப்பட்டுள்ளன. 17 அமைச்சர்களில் ஜோல்லெ அன்னசாஹப் மட்டும் பெண் அமைச்சராவார். இவருக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய துறைகளை தற்போதைக்கு முதலமைச்சர் எடியூரப்பாவே கவனித்து வருகிறார். ஏற்கனவே, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசில் சாதிவாரி பிரதிநிதித்துவப்படி 5 பேர் துணை முதலமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், கார்நாடகாவில் பெரும்பான்மை சாதியினரின் அடிப்படையில் 3 பேரை துணை முதலமைச்சர்களாக எடியூரப்பா நியமித்துள்ளார்.

மேலும் பார்க்க...  உதயநிதி ஸ்டாலினின் அரசியல்
First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading