மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டிடம் அனுமதி பெறத் தேவையில்லை! மோடிக்கு எடியூரப்பா கடிதம்

ஆற்றுப் படுகையில் எந்த ஒரு கட்டுமானம் கட்டுவதற்கு அந்த ஆற்றுப்படுகையில் வரும் மற்ற மாநிலங்களிடம் மத்திய அரசு ஒப்புதல் பெறவேண்டும் என்ற ஆந்திர அரசின் நிலைப்பாட்டுக்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லாததால் நாங்கள் அதனை ஒப்புக் கொள்ள முடியாது.

news18
Updated: August 6, 2019, 10:18 PM IST
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டிடம் அனுமதி பெறத் தேவையில்லை! மோடிக்கு எடியூரப்பா கடிதம்
மேகதாது
news18
Updated: August 6, 2019, 10:18 PM IST
கர்நாடகா எல்லைக்குள் காவேரி ஆற்றுப்படுகையில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. எனவே, மேகதாது அணை தொடர்பான கர்நாடகா அரசின் அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு அனுமதிகோரி காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கர்நாடக அரசு மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பியிருந்தது. கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், கர்நாடக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.


அந்தக் கடிதத்தில், ‘67 டி.எம்.சி கொள்ளவில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. அந்த அணை கட்டப்படும் பட்சத்தில் காவேரி மேலாண்மை ஆணையத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு மாத மாதம் அளிக்க வேண்டிய தண்ணீரை அளிப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 4.75 டி.எம்.சி தண்ணீரை பெங்களூருவுக்கு பயன்படுத்த முடியும். 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். மேகதாது அணை, கர்நாடக அரசின் எல்லைப் பகுதிக்குள் வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கர்நாடக எல்லைக்குள் காவேரி ஆற்றுப் படுகையில் அணை உள்ளிட்ட கட்டுமானங்கள் கட்டுவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு காவேரி ஆற்றுப் படுகையில் வரும் மாநிலங்களிடம் கர்நாடக ஒப்புதல் பெறவேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக அணை கட்டுவதற்கு மற்ற மாநிலங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று எந்தச் சட்டமும் உத்தரவும் இல்லை. எனவே, மத்திய அரசு, தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கவேண்டும்.

Loading...

1997-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம், கர்நாடகவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘ஆற்றுப் படுகையில் எந்த ஒரு கட்டுமானம் கட்டுவதற்கு அந்த ஆற்றுப்படுகையில் வரும் மற்ற மாநிலங்களிடம் மத்திய அரசு ஒப்புதல் பெறவேண்டும் என்ற ஆந்திர அரசின் நிலைப்பாட்டுக்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லாததால் நாங்கள் அதனை ஒப்புக் கொள்ள முடியாது. ஆற்றுப் படுகையில் வரும் மாநிலங்களிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்று ஆந்திர அரசு தவறான எண்ணம் கொண்டுள்ளது’ என்று 2000-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டிடம் அனுமதி பெறவேண்டும் என்ற கட்டாயம் கர்நாடகாவுக்கும் இல்லை, மத்திய அரசுக்கும் இல்லை. எனவே, கர்நாடக அரசு அளித்த மேகதாது அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்’என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...