அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பெங்களூருவில் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு

கோப்புப்படம்
- News18 Tamil
- Last Updated: July 12, 2020, 1:45 PM IST
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் பெங்களூரில் ஜூலை 14-ம் தேதி முதல் ஜூலை 22-ம் தேதி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. ஒரு நாளில் 25,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கடந்த நான்கு நாள்களில் 1 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 36,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி பெங்களூரு நகர்ப்புறம் மற்றும் புறநகரில் வரும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை முழுமையான ஊரடங்கு பிறப்பிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவ வல்லுநர்கள் அறிவுரைப்படி பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு ஊரகப்பகுதியில் வரும் 14-ம் தேதி இரவு 8மணி முதல் 22-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவமனைகள், மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. ஒரு நாளில் 25,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கடந்த நான்கு நாள்களில் 1 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 36,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி பெங்களூரு நகர்ப்புறம் மற்றும் புறநகரில் வரும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை முழுமையான ஊரடங்கு பிறப்பிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.