எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர்...! இன்று மாலை பதவியேற்பு

Yeddyurappa meets Governor to stake claim, requests for swearing-in ceremony today | சில நாட்களில் சட்டப்பேரவையில் எடியூரப்பா தனது அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது.

எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர்...! இன்று மாலை பதவியேற்பு
எடியூரப்பா
  • News18
  • Last Updated: July 26, 2019, 10:30 AM IST
  • Share this:
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில், எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு இன்று மாலை பதவியேற்க உள்ளது.

கர்நாடகாவில் நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதனை அடுத்து ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது.

டெல்லியில் நேற்று இது தொடர்பான ஆலோசனை அமித்ஷா தலைமையில் நடந்தது. எடியூரப்பா உள்ளிட்ட மாநில பாஜக தலைவர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர்.


இதற்கிடையே, 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று காலை ஆளுநர் வாஜுபாய் வாலாவை எடியூரப்பா சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தையும் அவர் அளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார். இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்கிறார்.சில நாட்களில் சட்டப்பேரவையில் எடியூரப்பா தனது அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது.

பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது. 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், பெரும்பான்மைக்கு தேவையான எண்களும் குறையும் என்று கூறப்படுகிறது.

First published: July 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading