கர்நாடகாவில் ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார் எடியூரப்பா!

நாளை  பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார் எடியூரப்பா!
எடியூரப்பா
  • News18
  • Last Updated: July 24, 2019, 1:05 PM IST
  • Share this:
குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததையடுத்து கர்நாடகாவில் ஆட்சி அமைக்க நாளை எடியூரப்பா ஆளுநரிடம் உரிமை கோருகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஆட்சி செய்த காங்கிரஸ், ஜே.டி.எஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் குமாரசாமி அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாக்கெடுப்பின் முடிவில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி. கர்நாடக சட்டப்பேரவையில், பா.ஜ.கவுக்கு ஆதரவாக 105 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இந்தநிலையில், பா.ஜ.க ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் முரளிதர ராவ் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இன்று கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பா நாளை ஆளுநரிடம் உரிமை கோருகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை  பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... ’உன் துணிச்சலை வணங்குகிறேன்’ - சூர்யாவுக்கு வாழ்த்து கூறிய சத்தியராஜ்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading