கர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு

news18
Updated: May 16, 2018, 10:44 PM IST
கர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு
news18
Updated: May 16, 2018, 10:44 PM IST
கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பாஜக தலைவர் எடியூரப்பா நாளை பதவியேற்கிறார். இதற்கான அறிவிப்பை ஆளுநர் வஜுபாய் வாலா இன்று வெளியிட்டார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் நடைபெற்ற 222 தொகுதிகளில், பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 தொகுதிகளிலும், பிற கட்சி வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

பாஜக 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளபோதிலும், தனித்து ஆட்சியமைப்பதற்கு அக்கட்சிக்கு 9 இடங்கள் குறைவாக உள்ளன. இந்நிலையில், பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் விதமாக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்க்க காங்கிரஸ் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், குமாரசாமி உள்ளிட்டோர் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து தங்களது முடிவை தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஜக தலைவர் எடியூரப்பா ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். பின்னர், குமாரசாமியும் ஆளுநரை சந்தித்தார். அப்போது, தனக்கு117 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு ஆளுநர் வஜுபாய் வாலா இன்று இரவு அழைப்பு விடுத்தார். மேலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு எடியூரப்பாவிற்கு 10 நாள் அவகாசம் வழங்குவதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்