Home /News /national /

பிவி சிந்து சாதி, தக்காளி இல்லாமல் சாம்பார்... இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பிவி சிந்து சாதி, தக்காளி இல்லாமல் சாம்பார்... இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

கூகுள்

கூகுள்

ரியோ ஒலிம்பிக்கில் பிவி சிந்து வெள்ளி வென்றபோதே பலரும் அவரது சாதி குறித்து தேட தொடங்கிவிட்டனர். தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இது மிகவும் அதிகமாக இருந்துள்ளது. PV Sindhu Caste என தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

    இணையத்தை பயன்படுத்துவர்களின் முக்கிய விருப்பமாக கூகுள் தேடுதல்பொறி உள்ளது. கூகுள் மூலம் தினமும் கோடிக்கணக்கானோர் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுகின்றனர். இதில்,பலர் தங்களது துறை, பணி சார்ந்த விஷயங்கள் குறித்து தேடி தெரிந்துகொள்பவர்கள். விந்தையான தேடுதல்களை கொண்ட நபர்களும் உண்டு. அவ்வாறு 2021ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் தேடியவை என்ன?

    பிவி சிந்துவின் சாதி

    பாட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று பல்வேறு சிறப்புகளையும் சாதனைகளையும் படைத்தவர் பிவி சிந்து. ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  வெங்கல பதக்கமும் வென்று  அசத்தியவர். எத்தனையோ சாதனைகளுக்கு பிவி சிந்து சொந்தக்காரராக இருந்தாலும் குகூளில் அவரது சாதி குறித்துதான் அதிகம் தேடப்பட்டுள்ளது. பிவி சிந்துவின் சாதி என்ன என ஏராளமான இந்தியர்கள் தேடியுள்ளனர்.

    ரியோ ஒலிம்பிக்கில் அவர் வெள்ளி வென்றபோதே பலரும் அவரது சாதி குறித்து தேட தொடங்கிவிட்டனர். தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இது மிகவும் அதிகமாக இருந்துள்ளது.

    கொரோனாவுக்கு எதிராக வீட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பது எப்படி

    இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போடும்பணி தொடங்கியது. தொடக்கத்தில் பலரிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் நிலவியது. தற்போது பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திகொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க வீட்டிலேயே கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிப்பது எப்படி என்பதற்கான தேடுதல் பலரிடம் எழுந்தது. அதன் விளைவாக,  How to make corona virus vaccine at home என்பதற்கான தேடுதல் கூகுளில் 200 சதவீதம் அதிகரித்தது.

    ரிஹானா இஸ்லாமியரா?

    அமெரிக்காவைச் சேர்ந்த  ரிஹானா Good Girl Gone Bad ஆல்பம் மூலம் உலகம் முழுவதும்  பிரபலமானார். இந்தியாவின் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் - போலீசார் இடையே மோதல்  ஏற்பட்டது  இந்தியா கடந்து அதிர்வலையை  உருவாக்கியது.  இது குறித்த செய்தியை ரிஹானா தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து Is rihanna muslim மற்றும் rihanna religion ஆகியவை குறித்து அதிகம் தேடப்பட்டுள்ளது. பணம் பெற்றுக்கொண்டு அவர் பதிவிட்டதாகவும் இந்தியர்கள் பலர் விமர்சனம் செய்தனர்.

    இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்கள் ஸ்ட்ரைக்... களத்தில் இறங்கி மின்சாரத்தை மீட்டெடுத்த இந்திய ராணுவம்


    மீராபாய் சானு  எந்த ஊரை சேர்ந்தவர்?

    இந்தியாவின் ஏழ்மையான பின் தங்கிய மாநிலமான மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.  இந்தியாவுக்காக பதக்கம் வென்றதுமே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை இந்தியர்கள் கூகுள் செய்ய தொடங்கிவிட்டனர். Mirabai Chanu belongs to which state’ என்பதற்கான தேடல் 250 சதவீதம் உயர்ந்தது.

    வீட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி

    கொரோனா 2வது அலையின்போது  உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவும் பலரும் உயிரிழந்தனர். இந்த நேரத்தில் வீட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி என்பது குறித்து பலரும் கூகுளில் தேடியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் யூடியூபில் அதிக பார்வையை பெற்றது.

    மேலும் படிங்க: பூண்டு பயிரிட இரண்டரை லட்சம் செலவு செய்து பாதி விலை கூட கிடைக்கவில்லை- விவசாயி என்ன செய்தார் தெரியுமா?


    பராக் அகர்வால் ஐஐடி ரேங்க், சம்பளம்

    ட்விட்டர் சி.இ.ஒ பதவியில் இருந்து  ஜேக் டோர்சி விலகியதை தொடந்து இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் ட்விட்டரின் புதிய சி.இ.ஒ.வாக அறிவிக்கப்பட்டார். ஐஐடியில் படித்த பராக் அகர்வால் எடுத்த ரேங்க் என்ன என்பது குறித்தும் அவரது சம்பளம் எவ்வளவு என்பது குறித்தும் பலரும் கூகுளில் தேட தொடங்கினர்.

    தக்காளி இல்லாம சாம்பார் வைப்பது எப்படி:

    சில வாரங்களுக்கு முன்பு தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்றது. ஒரு சில இடங்களில் 150 ரூபாயை கடந்து ஒருகிலோ தக்காளி விற்கப்பட்டது.  இதையடுத்து தக்காளி இல்லாமல் குழப்பு வைப்பது என்பது குறித்து பலரும் தேடத் தொடங்கினர். அதில் அதிகம் தேடப்பட்டது தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்பதுதான்.

    இதையும் படிங்க: மது விலை அதிரடி குறைப்பு : தமிழகத்திற்கு வந்து வாங்குவதை தடுக்க ஆந்திர அரசு நடவடிக்கை



    மிஸ் யுனிவர்ஸ் HARNAAZ KAUR SANDHU உயரம், வயது என்ன?


    இஸ்ரேலில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து பட்டம் வென்றார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றதால் ஒட்டுமொத்த இந்தியாவே அவரை கொண்டாடத் தொடங்கியது. இதையடுத்து ஹ்ர்னாஸ் சந்து குறித்து இணையத்தில் அதிகம் தேடப்பட்டது. குறிப்பாக அவரது உயரம் மற்றும் வயது குறித்த தேடுதல்கள் உச்சம் பெற்றன.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Google, Search engine

    அடுத்த செய்தி