Home /News /national /

YearEnder 2021 | கொரோனா முதல் பாண்டோரா வரை… 2021-ல் இந்தியாவில் நடந்த டாப் சம்பவங்கள்!

YearEnder 2021 | கொரோனா முதல் பாண்டோரா வரை… 2021-ல் இந்தியாவில் நடந்த டாப் சம்பவங்கள்!

புதிய கொரோனா வைரஸ் வேரியன்ட்டாக இந்தியாவில் நுழைந்த டெல்டா காரணமாக நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை தொட்டது.

புதிய கொரோனா வைரஸ் வேரியன்ட்டாக இந்தியாவில் நுழைந்த டெல்டா காரணமாக நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை தொட்டது.

புதிய கொரோனா வைரஸ் வேரியன்ட்டாக இந்தியாவில் நுழைந்த டெல்டா காரணமாக நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை தொட்டது.

ஒருபக்கம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி கொண்டிருந்தாலும் மறுபக்கம் விவசாயிகளின் தீவிர போராட்டங்கள், தேர்தல் வன்முறை, ஒலிம்பிக்கில் நாடு தங்கம் வாங்கிய தருணம் என 2021-ஆம் ஆண்டு பல நிகழ்வுகளால் நிரம்பி இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் 2021-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே திரும்பி பார்க்கலாம்.

2021 குடியரசு தினத்தில் வன்முறை:

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று தேசிய தலைநகர் டெல்லியின் வீதிகளில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். போராட்டக்காரர்கள் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடைகளை உடைத்து, போலீசாருடன் சண்டையிட்டு, வாகனங்களை கவிழ்த்து பெரிய களேபரத்தில் ஈடுபட்டனர். எல்லாவற்றுக்கும் உச்சமாக டிராக்டர்கள் மூலம் டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இந்தியாவின் மூவர்ணக் கொடிக்கு ஒதுக்கப்பட்டசிறப்பு கொடிக்கம்பத்தில் விவசாயிகள் தங்கள் கொடியை ஏற்றினர். 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் அமைதியாக போராடி வந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் டெல்லியின் பல இடங்களில் போலீஸாருடன் மோதினர். இது டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கலவரம் மற்றும் கடும் குழப்பத்திற்கு வழிவகுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை:

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வந்தநிலையில் அம்மாநிலத்தில் வன்முறை வெடித்தது. 2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொலை, கற்பழிப்பு மற்றும் நாசவேலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டின. தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சரியாக செயல்படாத மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1

ஆக்ஸிஜன் நெருக்கடி:

புதிய கொரோனா வைரஸ் வேரியன்ட்டாக இந்தியாவில் நுழைந்த டெல்டா காரணமாக நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை தொட்டது. எதிர்பாராத விதமாக தாக்கிய இந்த இரண்டாம் அலை காரணமாக நாட்டின் சுகாதார கட்டமைப்பு வரலாறு காணாத வகையில் பாதிக்கப்பட்டது. நாட்டில் இருந்த மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையுடன் லட்சக்கணக்கான தொற்று பாதித்த மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின. டெல்லி உட்பட நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.

பாண்டோரா பேப்பர்ஸ் லீக் (Pandora Paper leaks):

இந்தியா உட்பட 91 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அதிகாரிகளின் நிதி ரகசியங்களை பாண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது. லீக்கான பாண்டோரா பேப்பர்ஸில் 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பெயர்கள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் முக்கியமான நபர்கள். சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி, நீரவ் மோடி, ஜாக்கி ஷெராஃப், அஜித் கெர்கர் மற்றும் கிரண் மசூம்தார் ஷா உட்பட பலரின் பெயர்கள் இதில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுவது ஏன்? அதன் நோக்கம் என்ன? முதன்மை மருத்துவர் பகிரும் தகவல்கள்- பகுதி 2

டாடாவிடம் திரும்பிய ஏர் இந்தியா:

90 ஆண்டுகளுக்கு முன் 1932-ல் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் நிறுவப்பட்ட விமான நிறுவனம் மத்திய அரசின் வசம் சென்ற நிலையில், ஏலத்தை வெற்றிகரமாக கேட்டதை தொடர்ந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குரூப்பின் வசம் மீண்டும் சென்றது ஏர் இந்தியா நிறுவனம்.

100 கோடி மைல்கல்:

நடப்பாண்டு (2021) அக்டோபர் 21 இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக இருக்கிறது. COVID-19-ன் பயங்கரமான இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடிய பிறகு, இந்தியா 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி என்ற மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.
Published by:Archana R
First published:

Tags: India, YearEnder 2021

அடுத்த செய்தி