Home /News /national /

சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள 2022 - 23 : சிறுதானியங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தெரியுமா?

சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள 2022 - 23 : சிறுதானியங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தெரியுமா?

சிறுதானியங்களின் உணவு வகைகள்

சிறுதானியங்களின் உணவு வகைகள்

Year 2022-23 : பாரம்பரிய அரிசி ரகங்கள், சிறுதானியங்கள் போன்றவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்க கூடிய உணவுகள் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

இட்லி, தோசை, அரிசி சாதம் போன்ற தென்னிந்தியர்கள் கடைப்பிடிக்கும் சாதாரண உணவு பழக்கங்கள் கூட, இன்றைக்கு நம்மில் பெரும்பாலனவர்களிடம் இருந்து மறைந்து வருகிறது. நூடுல்ஸ், பீட்சா, பர்க்கர் போன்ற வெளிநாட்டு மக்களின் உணவு பழக்கங்களை நம்மை ஆட்கொள்ள தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த கேல்வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், கம்பு போன்ற எண்ணற்ற சிறுதானியங்கள் நம் வாழ்க்கையில் இருந்து மட்டுமல்ல, நம் மனதில் இருந்தும்கூட ஏறத்தாழ மறந்துவிட்டது.

பாரம்பரிய அரிசி ரகங்கள், சிறுதானியங்கள் போன்றவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்க கூடிய உணவுகள் என்பதை நாம் மறந்துவிட்டோம். பொதுவாக, இந்த உணவு ஜீரணத்திற்கு எளிதானவை என்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோய் எதிர்ப்பு திறன்களை கொண்டவை. சிறுதானியங்களின் உணவு வகைகள் குறித்து, சில பராம்பரிய உணவு நல ஆர்வலர்கள், சமூக ஊடகங்களில் பகிரப்படும் கருத்துக்கள் வாயிலாக இன்றைக்கு ஓரளவுக்கு அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியிருக்கிறது.

இதையும் படியுங்கள் : நாங்க ரொம்ப ஸ்ட்ரிட்; ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா குழுமம் அதிரடி உத்தரவு

இத்தகைய சூழலில், அரசும் கூட, அதற்கான விழிப்புணர்வை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2022 - 23 ஆண்டை, சர்வதேச சிறுதானியங்களின் ஆண்டாக அனுசரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அண்மையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது அறிவித்தார். சிறுதானியங்களை விளைவித்த பிறகு, அவற்றை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றவும், உள்நாட்டில் அவற்றை சாப்பிடும் பழக்கத்தை மக்களிடம் அதிகரிக்கவும், சர்வதேச அளவில் நம்மூர் சிறுதானியங்களை கொண்டு சேர்க்கும் வகையில், அவற்றை பிராண்ட் பொருட்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு வெளியிட்டார்.

முன்னதாக, 2023ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அனுசரிக்க வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு தீர்மானம் இயற்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சர்வதேச ஐ.நா. அமைப்பும், மத்திய அரசும் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறுதானியங்களில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள் : குழந்தைக்கு சுஷ்மா என்ற பெயர் சூட்ட முடிவெடுத்தார் என் அம்மா... பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

உடல் எடையை குறைக்கும் : 



சிறுதானியங்களில் கால்சியம், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற மினரல்கள் நிரம்பியுள்ளன. இது மட்டுமல்லாமல், ஆன்டிஆக்சிடன்ட், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவையும் கூட இருக்கிறது. இவை அனைத்துமே நம்மில் உடல் பருமனை தடுத்து, எடை குறைப்பை ஊக்குவிக்கக் கூடியதாகும்.

எலும்பு பலப்படும் : 



சிறுதானியங்களில் மிக அதிகமான அளவுக்கு கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை நமது எலும்புகளை பலப்படுத்த கூடியவை.

சர்க்கரை கட்டுப்படுத்தப்படும் : 

Diabetes Healthy living

சிறுதானியங்களில் உயர்ந்த தரத்திலான கார்ப்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், இவை நம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: International, Millets, Millets Food

அடுத்த செய்தி