ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி!

ஜெகன்மோகன் ரெட்டி

தனது தந்தை ராஜசேகர் மறைவையடுத்து கட்சி தொடங்கிய ஜெகன் மோகன், சரியாக 10 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.

  ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிளை கைப்பற்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

  இந்த விழாவில் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

  பதவியேற்புக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு சென்று ஜெகன் மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மேடைக்கு சென்ற கிறிஸ்தவ பாதிரியார்கள், ஜெகன் மோகனுக்காக பிரார்த்தனை செய்தனர்.

  தனது தந்தை ராஜசேகர் மறைவையடுத்து கட்சி தொடங்கிய ஜெகன் மோகன், சரியாக 10 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திராவின் 2-வது முதலமைச்சராக ஜெகன் மோகன் பொறுப்பேற்றுள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: