Home /News /national /

பெண்ணிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசும் எம்பி.. சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ

பெண்ணிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசும் எம்பி.. சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ

ஹிந்துபுரம் எம்பி கோரண்ட்லா மாதவ்

ஹிந்துபுரம் எம்பி கோரண்ட்லா மாதவ்

தெலுங்கு தேசம் கட்சியினர் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

    ஹிந்துபுரம் மக்களவை உறுப்பினர் கோரண்ட்லா மாதவ் பெண் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் தன்னுடைய அந்தரங்க உறுப்பை காட்டும் காணொலி சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர பிரதேச மாநிலம் இந்துபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் கோரண்ட்லா மாதவ். இவர் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் ஆவார். இந்நிலையில், மக்களவை எம்பி கோரண்ட்லா மாதவ் பெண் ஒருவருடன் வீடியோ காலில் பேசி கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய அந்தரங்க உறுப்பை காண்பிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

    இதையும் படிங்க: டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை.. நாட்டின் மொத்த பாதிப்பு 9ஆக உயர்வு

    இந்த நிலையில் இன்று காலை ஹிந்துபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் மாதவ் தெலுங்கு தேசம் கட்சியினர் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது பற்றி நான் எஸ்.பியிடம் புகார் செய்திருக்கிறேன் இந்த வீடியோ தொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் நான் தயார் என்று கூறினார்.

    ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அவந்தி ஸ்ரீனிவாஸ், அம்பதி ராம்பாபு பெண்களுடன் ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையை கிளம்பியது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Viral Video, YSR Congress

    அடுத்த செய்தி