யாசின் மாலிக்கின் இயக்கத்துக்கு தடை விதித்தது உள்துறை அமைச்சகம்!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து அமைதியை சீர் குலைத்து வருவதாக கூறி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

news18
Updated: March 22, 2019, 7:32 PM IST
யாசின் மாலிக்கின் இயக்கத்துக்கு தடை விதித்தது உள்துறை அமைச்சகம்!
யாசின் மாலிக்
news18
Updated: March 22, 2019, 7:32 PM IST
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கின் கட்சியான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பிரிவினை பேசி வரும் தலைவர்களில் ஒருவராக யாசின் மாலிக் அறியப்படுகிறார். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தையும் அவர் நடத்தி வருகிறார். பெரும்பாலான நாட்களில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கான பாதுகாப்பு புல்வாமா தாக்குதலை அடுத்து விலக்கிக்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு கோதிபாஹ் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அத்துடன் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் தேசிய விசாரனை ஆணையம் சோதனைகளை நடத்தியது.

Read Also... பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம்...? பரபரப்பை ஏற்படுத்திய ‘எடியூரப்பா டைரி’ விவகாரம்

இந்நிலையில், யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து அமைதியை சீர் குலைத்து வருவதாக கூறி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

“அமைதி வழியிலேயே போராட்டம் என்று அறிவித்த யாசின் மாலிக் இயக்கத்தின் மீது தடை ஏன்?” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading...
Also See...

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...