குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
அதிமுகவில் சதிவலையை பின்னியவர்களை மக்களுக்குத் தெரியும் என்றும் அவர்களுக்கு மக்கள் தண்டனை தருவார்கள் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுகவில் தற்போது பணத்திற்கும் துரோகத்திற்கு தான் மதிப்பு உள்ளது என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் தமது தலைமையை ஏற்க விரும்புவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னையில் ராணிமேரி கல்லூரி மாணவி போதை மாத்திரை உட்கொண்டு இறந்ததாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதியின் கண் பாதிப்புக்கு தாய்லாந்து மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் பெண்ணின் ஏடிஎம் அட்டையை திருடி பணம் எடுத்த புரோகிதரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல் மலையிலிருந்து 200 அடி பள்ளத்தில் காரை கவிழ்த்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சென்னை பூந்தமல்லி அருகே மூன்றாயிரம் சிலம்ப வீரர்கள் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி, சாதனை படைத்துள்ளனர்.
இளம்பெண்ணை மீட்டுத்தரக்கோரி அவரது பெற்றோர் புகார் அளித்ததால், திருவண்ணாமலையில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் போலீசார் நேற்றிரவு அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் இணைவதற்கு 3 நாட்களில் 56,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
3 மக்களவை மற்றும் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தல்களில் பாஜக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.
சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீரிழிவு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒரே நாடு ஒரே டயாலிசிஸ் திட்டத்தை தொடங்க உள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், விஜயநகர மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் சரமாரியாக மோதிக்கொண்டனர். இதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருசக்கர வாகனங்களில் விதிமீறி பொருத்தப்பட்டிருந்த சைலன்ஸர்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை அழித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் பயணிக்கும் சாலைக்கு மிக அருகே யானைகள் கூட்டமாக நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார் அப்போது, இந்தியா தற்போது உலகையே வழி நடத்தி வருவதாக தெரிவித்தார்.
ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக, அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ பெர்னான்டசுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் நிரப்புவதற்காக நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களுடன் குவிந்த காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
ருமேனியாவில் அமைக்கப்பட்டுள்ள தலைகீழான வீடு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
பெருவில் இன்கா பழங்குடியின மக்களின் பாரம்பரிய விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
அமெரிக்காவில் நடைபெற்ற பன்றி ஓட்டப் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Must Read : இடைத்தேர்தல்.. கையெழுத்து போடப் போவது யார்? அதிமுகவில் புதிய சிக்கல்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மும்பை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வீழ்த்தியது.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவை அணியை திண்டுக்கல் அணி வீழ்த்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headlines, Today news, Top News, Yashwant Sinha