சட்டப் பிரிவு 370-வது நீக்கப்பட்டது அரசியலுக்காக...! பா.ஜ.கவை விமர்சிக்கும் யஸ்வந்த் சின்ஹா

இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ளது. பா.ஜ.கவின் இந்தச் செயல் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவும்.

news18
Updated: August 6, 2019, 2:15 PM IST
சட்டப் பிரிவு 370-வது நீக்கப்பட்டது அரசியலுக்காக...! பா.ஜ.கவை விமர்சிக்கும் யஸ்வந்த் சின்ஹா
யஸ்வந்த் சின்ஹா
news18
Updated: August 6, 2019, 2:15 PM IST
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் நடவடிக்கை என்று முன்னாள் பா.ஜ.க தலைவர் யஸ்வந்த் சின்ஹா விமர்சனம் செய்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவர்ஒப்புதல் மூலம் ரத்து செய்யப்பட்டது. மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதா மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.கவின் நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துவருகிறது. இந்தநிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.கவின் முன்னாள் தலைவருமான யஸ்வந்த் சின்ஹா இதுகுறித்து விமர்சனம் செய்துள்ளார்.


இதுகுறித்து என்.டி.டி.விக்கு அவர் அளித்த பேட்டியில், ‘சட்டப் பிரிவு 370-வதை நீக்கியது கண்டிப்பாக அரசியலுக்காக செய்யப்பட்டது. இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ளது. பா.ஜ.கவின் இந்தச் செயல் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவும்.

இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு, ராஜீவ் காந்தி பெற்ற வெற்றியை விட மிகப் பெரும் வெற்றியை வரும் தேர்தலில் பா.ஜ.க பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும். இந்த நடவடிக்கை, ஜம்மு காஷ்மீர் மக்களை அந்நியப்படுத்திவிடும்’ என்று எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Also see:

Loading...

<
First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...