குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் முன்னிலையில் இவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தனது வேட்புமனுவை ஜூன் 24ஆம் தேதி தாக்கல் செய்தார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முன்னெடுப்பின் பேரில் யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது.பொது வேட்பாளர் தேர்வில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயரை மம்தா முதலில் பரிந்துரைத்தார். இதற்கு சரத் பவார் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபல கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் முன்வந்த நிலையில், இந்த இருவருமே வாய்ப்பை ஏற்கவில்லை.
இந்நிலையில், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்த யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகளின் விருப்பத்தை ஏற்று தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குகிறார். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சரானார். பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் கட்சி தலைமையிடம் இவருக்கு விரிசல் போக்கு உருவானது.
இதையும் படிங்க:
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் கிராமத்திற்கே தற்போது தான் மின்சார வசதி
இதையடுத்து 2018ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடியின் அரசின் திட்டம் மற்றும் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக திரிணாமூல் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் யஷ்வந்த் சின்ஹா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.