யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது... டெல்லியில் மக்கள் வெளியேற்றம்

அரசு நிர்வாகம் 24 மணி நேரமும் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது... டெல்லியில் மக்கள் வெளியேற்றம்
யமுனை ஆற்றில் வெள்ளம்
  • News18
  • Last Updated: August 20, 2019, 2:45 PM IST
  • Share this:
டெல்லி யமுனை ஆற்றில் அபாய அளவைத்தாண்டி வெள்ள நீர் செல்வதால் 10,000-கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஹரியானா மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஹத்னிகுண்ட் அணைக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு பின், வினாடிக்கு 8 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து 1 லட்சத்து 40,000 கன அடி நீர் யமுனை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டியது வெள்ளம்யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அபாய அளவான 205 அடியை தாண்டி வெள்ள நீர் செல்கிறது. கரையோரம் வசிக்கும் 10,000-கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு நிர்வாகம் 24 மணி நேரமும் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

யமுனை ஆற்றில் வெள்ளம்


இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மேலும் யமுனை ஆற்றில் அபாய அளவை மீறி வெள்ளம் ஓடுவதால் டெல்லியிலுள்ள பழைய யமுனை ஆற்றுப்பாலம் மூடப்பட்டுள்ளது. நீரின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், பாதுகாப்பு கருதி இந்த பாலத்தில் நாளை வரை போக்கு வரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... பொது கழிப்பறையில் 20 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி
First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading