அதிதீவிர புயலாக மாறியது யாஸ்: ஒடிசாவில் கனமழை- நாளை கரையை கடக்கிறது!

யாஸ் புயல்

பாலசோர் பகுதியில் இருந்து  430  கிலோ மீட்டர் தொலைவிலும் பாரதீப் பகுதியில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும் கடலில் யாஸ் புயல் மையம் கொண்டுள்ளதாகவும்  வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து  ஒடிசா கடற்கரை பகுதியில் நாளை மதியம் இந்த புயல் கரையை கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதி தீவிர புயலாக வலுபெற்றுள்ளது. இந்த புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், ஒடிசாவின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

  கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து  நேற்று புயலாக   புயலாக  மாறியது.  இந்த புயலுக்கு  யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இரவு மேலும் வலுபெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே நாளை மதியம்  இந்த புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ பாலசோர் பகுதியில் இருந்து  430  கிலோ மீட்டர் தொலைவிலும் பாரதீப் பகுதியில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும் கடலில் யாஸ் புயல் மையம் கொண்டுள்ளதாகவும்  வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து  ஒடிசா கடற்கரை பகுதியில் நாளை மதியம் இந்த புயல் கரையை கடக்கக் கூடும் “ என்று தெரிவித்துள்ளது.

  155 கிலோ மீட்டர் முதல் 165 கிலோமீட்டர்  வேகத்தில் இந்த புயல் கரையை கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  யாஸ் புயல் காரணமாக பிகார் மாநிலத்தில் மே 27 முதல் மே30ம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  புயல் எச்சரிக்கையையடுத்து மேற்கு வங்கத்தில் 45 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் முகாமிட்டுள்ளன.

  வங்க கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 265 படகுகள் பத்திரமாக கரைக்கு திரும்பியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.  இதனிடையே, யாஸ் புயல் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  சந்திபூர் பகுதியில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் பாலசோர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

  கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர், பாலசோர் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து பாலசோர் பகுதிக்கு உள்துறை  அமைச்சரை அனுப்பி வைத்துள்ள முதலமைச்சர் நவின் பட்நாயக் , புயல் பாதிப்பு குறித்து உடனுக்குடன் தகவலை அளிக்க  உத்தரவிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: