Home /News /national /

பிரபல WWE மல்யுத்த வீரர் 'கிரேட் காளி' பாஜகவில் இணைந்தார்

பிரபல WWE மல்யுத்த வீரர் 'கிரேட் காளி' பாஜகவில் இணைந்தார்

சர்வதேச தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பாக கிரேட் காளி பஞ்சாப் போலீசில் அதிகாரியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நான்கு ஹாலிவுட் மற்றும் இரண்டு பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

    பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளி, பாஜகவில் இன்று இணைந்தார். இன்னும் சில நாட்களில் பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிரேட் காளியின் இணைப்பு, பாஜக பிரசாரத்திற்கு பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

    மினி லோக்சபா என வர்ணிக்கப்படும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. டெல்லி கடந்த சில மாதங்களாக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராடினர். அவர்களின் உறுதியான போராட்டம் காரணமாக அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது.

    உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெறுதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கு அதிக இடங்களை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

    இதையும் படிங்க : லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன்

    பஞ்சாபில் வரும் 20-ம்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 20-ம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

    இந்நிலையில் பிரபல மல்யுத்த வீரரான கிரேட் காளி, டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று பாஜகவில் இணைந்தார். மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது விவசாயிகளுக்கு ஆதரவாக காளி குரல் எழுப்பியிருந்தார்.

    பாஜகவில் இணைந்தது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''பாஜகவில் இணைந்ததை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தியாவுக்கு பிரதமர் மோடி மிகச் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறார். இதனால் நான் இருக்கப்பட்ட இந்த அரசு நிர்வாகத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக நானும் ஏன் பங்கேற்க கூடாது என்று கருதினேன். இதன் காரணமாகத்தான் நான் பாஜகவில் இணைந்துள்ளேன்.'' என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க : மலைப்பாம்பை மாலையாக போட்டு பைக்கில் வைத்து துன்புறுத்திய இளைஞர்.. வைரலாகும் வீடியோ

    கிரேட் காளி கடந்த 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக WWE மல்யுத்த களத்தில் இறங்கினார். சர்வதேச தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பாக கிரேட் காளி பஞ்சாப் போலீசில் அதிகாரியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நான்கு ஹாலிவுட் மற்றும் இரண்டு பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: BJP

    அடுத்த செய்தி