ட்ரெண்டாகும் சுதந்திரதின ஹேஷ்டேக்... வாழ்த்து தெரிவித்த ஸ்டெப்னி மெக்மஹோன்

ஸ்டெப்னி மெக்மஹோன்

உலக மல்யுத்த பொழுதுபோக்கின் துணைத் தலைவர் ஸ்டெப்னி மெக்மஹோன் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  75வது சுதந்திர தினத்தில் இந்தியா அடியெடுத்து வைக்கிறது. சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  சுதந்திர தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செங்கோட்டைக்கு சென்ற பிரதமரை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர், தேசிய கீதம் ஒலிக்க மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.  இதன் பின்னர் இந்தியாவின் மாநிலங்களில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றினர்.  தொடர்ந்து, சரியாக 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மரியாதை செலுத்தினார்.  முன்னதாக மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சுதந்திர போராட்டத்திற்காக போராடி இன்னுயிர் நீத்த வீரர்களை நினைவுக்கூர்ந்தார். மேலும், இந்திய விடுதலைக்காக தமிழகத்தின் பங்களிப்பு குறித்து முழுமையான ஆவணம் ஒன்று ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு அது தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் எனக்கூறினார்.  இதனிடையே இன்று இணையத்தில் பலரும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுதந்திரதினம் ,IndependenceDay,IndiaAt75 ஆகிய டேகுகளும் ட்ரெண்டாகி உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ஆன்மீகவாதிகள், இணையவாசிகள் என இணையம் பயன்படுத்தும் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் உலக மல்யுத்த பொழுதுபோக்கின் துணைத் தலைவர் ஸ்டெப்னி மெக்மஹோனும் தனது வாழ்த்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.  உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனம் (WWE ) என்பது பொது வர்த்தகத்தில் இருக்கும், தனியார் கட்டுப்பாட்டு ஒருங்கிணைந்த ஊடகம் (தொலைக்காட்சி, இணையம், மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறது) மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பிரதானமாக தொழில்முறை மல்யுத்தத்தை கையாள்கிறது.

  தற்போது இதன் துணை தலைவராக ஸ்டெப்னி மெக்மஹோன் உள்ளார். இவர் WWE தலைவர் மற்றும் CEO வின்ஸ் மக்மஹோன் மற்றும் லின்டாமக்மஹோன் ஆகியோரின் மகளும், ஷேன் மக்மஹோனின் இளைய சகோதரியும், பால் லெவெஸ்க் (ட்ரிப்பிள் ஹெச்சின்) மனைவியுமாவார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: