Home /News /national /

தேர்தல் நேரத்தில் விருதா? பத்மஸ்ரீ விருதை மறுத்த எழுத்தாளர் கீதா மேத்தா

தேர்தல் நேரத்தில் விருதா? பத்மஸ்ரீ விருதை மறுத்த எழுத்தாளர் கீதா மேத்தா

நவீன் பட்நாயக் சகோதரி கீதா மேத்தா

நவீன் பட்நாயக் சகோதரி கீதா மேத்தா

தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குவதைத் தவிர்க்க கீதா மேத்தாவே முன்வந்து இந்த விருதை தான் வாங்கப்போவதில்லை என மறுத்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
பிரபல எழுத்தாளரான கீதா மேத்தா தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதை வேண்டாம் என மறுத்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் நவீன் பட்நாயக். இவரது சகோதரி தான் கீதா மேத்தா. கீதா மேத்தா அமெரிக்கவாழ் இந்தியர். இந்திய ஆங்கில இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத எழுத்தாளராக உள்ளார். இவரது நாவல்கள் சுமார் 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பங்களாதேஷ் புரட்சி உள்ளிட்ட 14 சர்வதேச ஆவணப்படங்களை எடுத்து சர்வதேச இலக்கிய உலகில் தவிர்க்கமுடியா படைப்பாளியாக உள்ளார் கீதா மேத்தா.

பிஜு ஜனதா தளத்தின் தலைவராக உள்ள நவீன் பட்நாயக், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ளார். இதனால், ’இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் தனக்கு விருது அளிக்கப்பட்டது தவறாக சித்தரிக்கப்படுவதற்கு வாய்ப்பு அமைத்துத் தரும்’ என கீதா மேத்தா தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மறுத்துள்ளார்.

கீதா மேத்தாவின் கணவர் சோனி மேத்தா முன்னணி வெளியீட்டாளராக உள்ளார். இத்தம்பதியினர் சில நாள்களுக்கு முன்னர் தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். 90 நிமிடங்கள் வரையில் நீண்ட இந்த சந்திப்பு பெர்சனல் ஆனது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று கீதா மேத்தாவுக்கு கலை மற்றும் இலக்கிய பங்களிப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டால், தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்க நேரிடும் என்றும் இதைத் தவிர்க்கவே கீதா மேத்தாவே முன்வந்து இந்த விருதை தான் வாங்கப்போவதில்லை என மறுத்துள்ளார்.

இதுகுறித்து கீதா மேத்தா வெளியிட்டுள்ள குறிப்பில், “பத்மஸ்ரீ விருதுக்கு என் பெயரைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசு அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால், தேர்தல் காலம் இந்தியாவில் நெருங்கி வருவதால் இவ்விருதை நான் மறுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விருதால் இந்திய அரசாங்கத்துக்கும் எனக்கும் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: அமெரிக்காவிலிருந்து குடியரசு தின வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்
Published by:Rahini M
First published:

Tags: Padma Shri

அடுத்த செய்தி