பா.ஜ.கவில் இணைந்த ’தங்கல்' படத்தின் நிஜக் கதாபாத்திரங்கள்!

அந்தப் படம் வெளியான பிறகு, மகாவீர் சிங் போகாத் அவர்களது மகள்களும் குத்துச் சண்டை வீரர்களுமான கீதா போகாத், பாபிடா போகாத் ஆகியோர் தேசிய அளவில் அடையாளம் பெற்றனர்.

news18
Updated: August 12, 2019, 3:10 PM IST
பா.ஜ.கவில் இணைந்த ’தங்கல்' படத்தின் நிஜக் கதாபாத்திரங்கள்!
பாஜகவில் இணைந்த தக்கல் கதாபாத்திரங்கள்
news18
Updated: August 12, 2019, 3:10 PM IST
தங்கல் படத்தின் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கதாபாத்திரங்களான குத்துசண்டை வீரர்கள் மகாவீர் சிங் போகாத் மற்றும் அவரது மகள் பாபிடா போகாத் ஆகியோர் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.

அமீர்கான் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் தங்கல். குத்து சண்டை வீரரான மகாவீர் சிங், அவரது மகள்களை சர்வதேச குத்து சண்டை வீரராக உருவாக்கி, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

உலக அளவில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று மிகப் பெரும் வசூலை வாரிக் குவித்தது. அந்தப் படம் வெளியான பிறகு, மகாவீர் சிங் போகாத் அவர்களது மகள்களும் குத்துச் சண்டை வீரர்களுமான கீதா போகாத், பாபிடா போகாத் ஆகியோர் தேசிய அளவில் அடையாளம் பெற்றனர்.

இந்தநிலையில், பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் மகாவீர் சிங் போகாத்தும், அவரது இரண்டாவது மகள் பாபிடா போகாத்தும் பா.ஜ.கவில் இன்று இணைந்தனர்.

அந்த நிகழ்வில் மத்திய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ உடனிருந்தார். பாபிடா போகாத், மகாவீர் சிங் போகாத் கட்சியில் சேர்ந்திருப்பது, ஹரியானாவில் பா.ஜ.கவின் வெற்றிக்கு உதவும் என்று அக்கட்சி கருதுகிறது.

Also see:

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...