காணாமல் போன ஏஎன் 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு!

விமானத்தின் பாகம் கிடந்த இடம் அருகே தரையிறங்குவதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்படும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது

Web Desk | news18
Updated: June 12, 2019, 8:34 AM IST
காணாமல் போன ஏஎன் 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு!
ஏஎன் 32 ரக விமானம்
Web Desk | news18
Updated: June 12, 2019, 8:34 AM IST
காணாமல் போன ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்கள் அருணாச்சலபிரதேச வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிக்கு அருகே மீட்பு ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்படும் என்றும், வானிலிருந்து மீட்புப்படையினர் தரையிறக்கப்படுவார்கள் என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து, அருணாச்சலபிரதேச மாநிலத்தின் மெச்சுகா பகுதியில் உள்ள விமானப்படை தளத்துக்கு இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானம் கடந்த 3-ம் தேதி புறப்பட்டது. விமானத்தில் 13 பேர் இருந்த நிலையில், புறப்பட்ட 35 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கடந்த 8 நாட்களாக தேடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், காணாமல்போன விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில், லிப்போ பகுதியிலிருந்து வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் இது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஏஎன் 32 ரக விமானம் விபத்தில் சிக்கியது உறுதியாகியுள்ளது.

பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் அருகே இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர், இந்திய ராணுவத்தின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் ஆகியவை சென்று சேர்ந்தன. ஆனால், அடர்ந்த வனப்பகுதி மற்றும் உயரமான பகுதி என்பதால், விபத்து நடந்த இடத்தின் அருகே ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியவில்லை.

எனினும், விமானத்தின் பாகம் கிடந்த இடம் அருகே தரையிறங்குவதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்படும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது. தரைப்படையினரும் விபத்து நடந்த பகுதிக்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, விமானங்களிலிருந்து கருடா கமாண்டோக்கள், விமானப்படை மலையேற்ற வீரர்கள் மற்றும் தரைப்படை வீரர்கள் தரையிறக்கப்படுவார்கள் என்றும், விமானத்தின் மற்ற பாகங்களையும், விமானத்தில் இருந்த 13 பேரின் நிலை குறித்தும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.எனினும், அடர்ந்த வனப்பகுதி மற்றும் மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணிகளை மேற்கொள்வது சவாலாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also see... குட்டி சச்சின் என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...