ஹோம் /நியூஸ் /இந்தியா /

‘நான் மட்டும் நிதியமைச்சராக தொடர்ந்திருந்தால் அது நடந்திருக்காது’ - சுயசரிதையில் மனம் திறந்த பிரணாப் முகர்ஜி

‘நான் மட்டும் நிதியமைச்சராக தொடர்ந்திருந்தால் அது நடந்திருக்காது’ - சுயசரிதையில் மனம் திறந்த பிரணாப் முகர்ஜி

2வது ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசின் நிதியமைச்சராக, தான் தொடர்ந்திருந்தால் மமதா பானர்ஜியை கூட்டணியை விட்டு விலக விட்டிருக்க மாட்டேன்.

2வது ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசின் நிதியமைச்சராக, தான் தொடர்ந்திருந்தால் மமதா பானர்ஜியை கூட்டணியை விட்டு விலக விட்டிருக்க மாட்டேன்.

2வது ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசின் நிதியமைச்சராக, தான் தொடர்ந்திருந்தால் மமதா பானர்ஜியை கூட்டணியை விட்டு விலக விட்டிருக்க மாட்டேன்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாக திகழ்ந்த பிரணாப் முகர்ஜி தனது மறைவுக்கு முன்னதாக எழுதிய சுயசரிதை நேற்று வெளியிடப்பட்டது. 60 ஆண்டுகால அரசியல் அனுபவம் நிறைந்தவரான பிரணாப்பின் "The Presidential Years, 2012 -2017" என்ற தலைப்பிலான சுயசரிதையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை, பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சித் தலைவர்கள் குறித்த பார்வை, கடந்த கால அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் நிறைந்துள்ளன. அரசியல் அரங்கை அதிரச் செய்யுமளவுக்கு அவரின் கருத்துகள் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரணாப் முகர்ஜியின் சுயசரிதையில் பல முக்கியத் தகவல்கள்

இடம்பெற்றுள்ளன, அதில் சிலவற்றை தற்போது காணலாம்:

மமதா பானர்ஜி:

மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தொடர்பாக பிரணாப் முகர்ஜி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அதில்  2வது ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசின் நிதியமைச்சராக தான் தொடர்ந்திருந்தால் மமதா பானர்ஜியை கூட்டணியை விட்டு விலக விட்டிருக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய நேரடி முதலீட்டு விவகாரம், மாணியத்துடன் கூடிய எரிவாயு

சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 12 ஆக உயர்த்துவது, டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் 2012ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி விலக்கிக்கொண்டு கூட்டணியை விட்டு வெளியேறினார்.

(மமதா கூட்டணியை விட்டு வெளியேறிய அந்த நேரத்தில் மத்திய

நிதியமைச்சர் பதவியை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கவனித்து வந்தார்.)

“முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் இடையே பெருமளவு வித்தியாசம் இருந்தது. இடதுசாரிகள் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின்றி UPA-I கூட்டணி சாத்தியப்பட்டிருக்காது. இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து வெளியேறியபோது மன்மோகன் சிங் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன்தான் வென்றது.

“UPA-II கூட்டணி அமைக்கப்பட்டபோது முந்தைய கூட்டணியில்

இடம்பெற்றிருந்த இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் இடம்பெறவில்லை, மாறாக திரிணாமுல் காங்கிரஸின் 19 உறுப்பினர்களின் ஆதரவை மமதா வழங்கினார். ஆனால் அவரும் நீண்ட காலம் கூட்டணியில் இடம்பெறாமல் விலகினார்” என தனது சுயசரிதையில் பிரணாப் குறிப்பிட்டுள்ளார்.

தான் குடியரசுத் தலைவரான பின்னர் காங்கிரஸ் கட்சி தனது அரசியல் கவனத்தை இழந்துவிட்டது எனவும் பிரணாப் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தை உருவாக்க அனுமதித்திருப்பேன் என்று நான் நினைக்கவில்லை என பிரணாப் முகர்ஜி தனது சுயசரிதையில்

குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

Published by:Arun
First published:

Tags: Mamata banerjee, Pranab Mukherjee