மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, லடாக்கில் உள்ள லே மலைப்பகுதியில் கதரால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய தேசிய கொடி ஏற்றப்பட்டது. லடாக்கின் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ண மாத்தூர் இன்று காலை இக்கொடியை ஏற்றினார்.
225 அடி நீளம் 150 அடி அகலம் கொண்ட மூவர்ண கொடியின் எடை 1,000 கிலோவாகும். இந்திய ராணுவத்தின் 57வது பொறியாளர்
படைப்பிரிவினர் இக்கொடியை தயாரித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
It is a moment of great pride for 🇮🇳 that on Gandhi ji's Jayanti, the world's largest Khadi Tiranga is unveiled in Leh, Ladakh.
I salute this gesture which commemorates Bapu's memory, promotes Indian artisans and also honours the nation.
Jai Hind, Jai Bharat! pic.twitter.com/cUQTmnujE9
— Mansukh Mandaviya (@mansukhmandviya) October 2, 2021
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளன்று, லடாக்கில் உள்ள லே பகுதியில் உலகின் மிகப்பெரிய கதாரால் ஆன கொடி ஏற்றப்பட்டுள்ளது. இது, இந்தியாவுக்கு பெருமை அளிக்கும் தருணம்.
அண்ணலை நினைவு கூறவும் இந்திய கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசத்தை கெளரவிக்கும் வகையிலும் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
#WATCH | 150 troops of Indian Army’s 57 Engineer regiment carried the world’s largest Indian National flag made of khadi to the top of a hill at over 2000 feet above the ground level in Leh, Ladakh. It took two hours for troops to reach the top. pic.twitter.com/ZvlKEotvXy
— ANI (@ANI) October 2, 2021
கதர் கிராம தொழில் வாரியத்தால் தயாரிக்கப்பட்ட இக்கொடி லே பகுதியில் இந்திய ராணுவத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக லேவில் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ladakh, News On Instagram