உலகிலேயே உயரமான வாக்குச் சாவடி உள்ள இடம் எது தெரியுமா ?

இந்த ஊரில் செல்ஃபோன் வசதிகள் கிடையாது. இங்கு அதிகமான பனிப்பொழிவால் பல நாட்கள் சாலைகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.

உலகிலேயே உயரமான வாக்குச் சாவடி உள்ள இடம் எது தெரியுமா ?
வாக்குப்பதிவு.
  • News18
  • Last Updated: April 16, 2019, 3:10 PM IST
  • Share this:
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர்.

வாக்குச் சாவடிகள் அமைக்கும் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வரும் இவ்வேளையில், உலகிலேயே உயரமான வாக்குச்சாவடி கொண்ட இடம் எது? என்ற கேள்வி எழுந்திருக்கும்.

உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறேன். அது இந்தியாவில்தான் இருக்கிறது.




உலகின் உயரமான வாக்குச்சாவடி கடல் மட்டத்தில் இருந்து 15, 256 அடி உயரத்தில் உள்ளது. இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள கிராமத்தில் புத்த மத மக்கள்தான் அதிகமாக வசிக்கின்றனர். இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்டி மக்களவை தொகுதியில் இந்த வாக்குச்சாவடி இருக்கிறது.

மாண்டி தொகுதி மொத்தம் 17 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரும் தொகுதியாகக் கருதப்படுகிறது.இந்த கிராமத்தில் மொத்தமே 48 வாக்காளர்கள்தான் இருக்கின்றனர். அதில் 30 பேர் ஆண்கள் . 18 பேர் பெண்கள். இந்த வாக்குச் சாவடியில் தாஷிகாங் மற்றும் கேட் (gete) என்னும் இரண்டு கிராம மக்கள்தான் வாக்களிக்கின்றனர்.

இது இந்தியா மற்றும் சீன எல்லையிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த ஊரில் செல்ஃபோன் வசதிகள் கிடையாது. இங்கு அதிகமான பனிப்பொழிவால் பல நாட்கள் சாலைகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். இங்கு செல்ஃபோன் இணைப்பும் சரியாக இருக்காது என்பதால் தேர்தல் அதிகாரிகள் சாட்டிலைட் ஃபோன் தான் பயன்படுத்துவார்கள்.

அது வேறெங்குமில்லை. இமாசல பிரதேசத்தில் உள்ள ’தாஷிகாங்’ (tashigang) என்னும் கிராமம்தான். இதற்கு முன் தஷிங்காங்கிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ’ஹிக்கிம்’ கிராமத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அது 14,400 அடி உயரம் கொண்டது.

Also Watch : அரசியல் ஆரம்பம் | கமல்ஹாசன் பாஜகவின் ‘பி டீமா’?

First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading