ஹோம் /நியூஸ் /இந்தியா /

தெரிந்து கொள்ளுங்கள்.. உலகிலேயே மிக உயரமான வாக்குப் பதிவு மையம் இதுதானாம்..!

தெரிந்து கொள்ளுங்கள்.. உலகிலேயே மிக உயரமான வாக்குப் பதிவு மையம் இதுதானாம்..!

உலகின் மிக உயரமான வாக்குச்சாவடி

உலகின் மிக உயரமான வாக்குச்சாவடி

உலகிலேயே மிக உயரமான வாக்குச் சாவடி மையம் இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Himachal Pradesh, India

  இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 7,884 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தகவலின் படி இமாச்சல் மாநிலத்தில் மொத்தம் 55.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

  தேர்தலில் பல சுவாரசியமான அம்சங்கள் இருப்பது வழக்கம். அரசியல் கட்சி வாக்குறுதிகள், வேட்பாளர்கள் போன்றவற்றில் பல தனித்துவமான அம்சங்கள் இருப்பது போலவே, வாக்குச் சாவடி மையத்தில் தனித்துவத்தை இமாச்சல பிரதேச மாநிலம் வைத்துள்ளது. ஆம், உலகிலேயே மிக உயரமான வாக்குச் சாவடி மையம் இமாச்சலத்தில் உள்ளது.

  இமயமலைத் தொடர்களால் சூழ்ந்துள்ள இமாச்சலப் பிரதேசத்தில் தாஷிகங்க்(Tashigang) என்ற மலை பகுதி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 15,256 அடி உயரத்தில் உள்ள இந்த பகுதியில் வெறும் 52 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும், அங்குள்ள மக்கள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

  இதையும் படிங்க: இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்தி மசோதா - ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

  உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி மையத்தில் 52 வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய உள்ளதாக இமாச்சல தேர்தல் ஆணையர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இமாச்சலில் இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Elections, Himachal Pradesh, Polling day