Home /News /national /

இன்று உலக நுகர்வோர் உரிமைகள் தினம் - ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்

இன்று உலக நுகர்வோர் உரிமைகள் தினம் - ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்

நுகர்வோர்

நுகர்வோர்

அடிப்படை உரிமைகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தினத்தை அதற்காக ஒதுக்கி அவற்றை பற்றிய முழு தகவலையும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வார்கள்.

பல வகையான அடிப்படை உரிமைகள் இருந்தாலும், அவற்றை பற்றி மக்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. இது போன்ற அடிப்படை உரிமைகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தினத்தை அதற்காக ஒதுக்கி அவற்றை பற்றிய முழு தகவலையும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வார்கள். அந்த வகையில் நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் மார்ச் 15 ஆம் தேதியை 'உலக நுகர்வோர் உரிமைகள் தினமாக' அனுசரித்து வருகின்றனர்.

இந்தியாவில் சில அடிப்படை நுகர்வோர் உரிமைகளை கோடிட்டுக் காட்டும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986'ஐ இந்திய அரசாங்கம் நிறைவேற்றியது. உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி, ஒவ்வொரு நுகர்வோரும் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கியமான உரிமைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கல்வி உரிமை : நுகர்வோர் தங்களுக்கான சேவைகளைப் பெறுவதற்கு முன் நுகர்வோர் தகவல் திட்டங்கள் மற்றும் பொருட்களை அணுகுவதை உறுதி செய்வதே இந்த உரிமையின் முக்கிய நோக்கமாகும். ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அதை பற்றிய தகவலை அறிந்து கொள்ளவும், அது குறித்த சிறந்த முடிவுகளை எடுக்கவும் இந்த உரிமைகள் உதவுகிறது.

ALSO READ | நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் உறுதி
 கேட்பதற்கான உரிமை : எல்லா நுகர்வோரும் தன்னை பாதுகாக்க அல்லது தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள உரிமை உண்டு என்பதை இது குறிக்கிறது. அதன்படி, ஏதேனும் தயாரிப்பு அல்லது சேவைகளுக்கு எதிராக பயம் இல்லாமல் தங்களது புகார்களை நுகர்வோர் பதிவு செய்யலாம். ஏனெனில் இதைப் பற்றி கேட்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். மேலும் அந்தந்த துறைகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பொருத்தமான நீதிமன்றங்களில் நுகர்வோரின் புகார்கள் பரிசீலனை செய்யப்படும் என்று இந்த உரிமைச் சட்டம் உறுதியளிக்கிறது.

தீர்வுக்கான உரிமை : நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் அல்லது சுரண்டலால் பாதிப்பு ஏற்பட்டால், அத்தகைய முறைகேடுகளுக்கு எதிராக நீதியை பெற எல்லோருக்கும் உரிமை உண்டு. இதை உறுதிசெய்யும் விதமாக தான் இந்த உரிமை விளங்குகிறது. இதை எல்லா இந்தியர்களும் அவசியம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ALSO READ | ஏர் இந்தியாவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்
 பாதுகாப்பு உரிமை : இந்திய நுகர்வோர்களுக்கு ‘உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனைக்கு எதிராக பாதுகாக்கப்படும் உரிமையை’ இந்த அடிப்படை சட்டம் தருகிறது. இந்த பாதுகாப்பு உரிமையின் கீழ், சுகாதாரம், மருந்துகள், வாகனங்கள், வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பயணம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகள் ஆகியவற்றில் நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை இந்த உரிமை உணர்த்துகிறது.

தேர்வு செய்யும் உரிமை : கடைகளில் விற்கப்படும் பொருட்களில் எவற்றை தேர்வு செய்ய வேண்டும் என்பதை குறிக்கும் உரிமையாகும். எனவே நுகர்வோர் எம்.ஆர்.பி விலையில் பேரம் பேசலாம். ஏனெனில் இந்த விலையானது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படவில்லை, மேலும் உண்மையான விற்பனை விலையானது வரிகளின் அடிப்படையில் இதை விடவும் குறைவாக இருக்கலாம்.

ALSO READ | அரசின் சீருடை விதிகளுக்கு அனைவரும் உட்பட்டவர்களே - ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தகவல் அறியும் உரிமை : ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் உள்ள மிக முக்கிய உரிமை தான் 'தகவல் அறியும் உரிமை'. ஆனால், இது குறித்து பலர் அறிந்திருப்பது கிடையாது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,1986-இல் தகவல் அறியும் உரிமையை பற்றி விளக்கியுள்ளார். 'நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாப்பதற்காகவும், பொருட்களின் தரம், அளவு, திறன், தூய்மை, தரம் மற்றும் விலை குறித்துத் தெரிவிக்கும் உரிமை' என்று இதை வகைப்படுத்தி உள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Consumer, World Consumer day

அடுத்த செய்தி