World Bicycle Day 2021 உலக சைக்கிள் தினம்: தீக்குச்சிகளைக் கொண்டு பைசா ஃபார்திங் மாடலை உருவாக்கிய ஒடிசா கலைஞர்!

தீக்குச்சிகளைக் கொண்டு சைக்கிள்

மிதிவண்டிகள் உடற்பயிற்சிக்காகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கும் அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றன.

  • Share this:
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, பூரி மாவட்டத்தைச் சேர்ந்த சஸ்வத் ரஞ்சன் சாஹூ என்ற கலைஞர் 3,653 தீக்குச்சிகளை பயன்படுத்தி 1870-களில் கண்டுபிடிக்கப்பட்ட மாடலான பைசா-ஃபார்மிங் சைக்கிளின் மாதிரியை உருவாக்கியுள்ளார்.

18 வயதான அந்த நபர் சைக்கிள் மாதிரியை வடிவமைக்க ஏழு நாட்கள் எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார். அந்த மாதிரி 50 அங்குல நீளமும் 25 அங்குல அகலமும் கொண்டதாக உள்ளது. இதுகுறித்து ANI உடன் பேசிய சாஹூ, "இந்த மாதிரியைத் தயாரிக்க எனக்கு ஏழு நாட்கள் பிடித்தன" என்று தெரிவித்தார். 1870 முதல் 1880 வரையிலான காலகட்டத்தில் பென்னி-ஃபார்திங் சைக்கிள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

இப்போதெல்லாம், மிதிவண்டிகள் உடற்பயிற்சிக்காகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கும் அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றன. மோட்டார் வாகனங்கள் மூலம் மாசு அளவு அதிகரிக்கும் போது, ஒரு சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு நட்பான விருப்பத்தை வழங்குகிறது. எனவே, சைக்கிள் பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இந்த மாதிரியை உருவாக்கியதாக சாஹூ ANI பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

ALSO READ | இந்தியாவின் அசிங்கமான மொழியாக கன்னடத்தை காட்டிய கூகுள்- கொதித்தெழுந்த கன்னட நெட்டீசன்ஸ்

நல்ல ஆரோக்கியத்திற்காக மிதிவண்டிகளை சவாரி செய்ய வேண்டும் என்றும் சுற்றுச்சூழலை மாசு இல்லாததாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.தொடர்ந்து பேசிய அவர், "நான் பள்ளியில் படிக்கும் போது, இந்த மிதிவண்டியைப் பார்த்தேன். அதன் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டேன். இதுபோன்ற ஒரு சைக்கிளை சொந்தமாக்க விரும்பினேன். ஆனால் இந்த வகை சைக்கிள் இப்போது நம் வட்டாரத்தில் கிடைக்கவில்லை.இதனால், உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு சைக்கிளின் மாதிரி வடிவத்தை தயாரிக்க நினைத்தேன், " என்று சாஹூ கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த வேண்டும் என பரப்புரை செய்தார். அவரது முயற்சிக்கு 56 நாடுகள் ஆதரவளிக்க, ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதியை உலக மிதிவண்டி நாளாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை. ஏப்ரல் 2018 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அறிவித்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ALSO READ | ஒரு குர்தாவின் விலை ரூ.2.5 லட்சமா? கொதிக்கும் நெட்டிசன்கள்!

காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் 1890களில் சைக்கிள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி உள்ளது. 1910 துவங்கி 1946 வரை சுமார் 2.5 பில்லியன் சைக்கிள்கள் இந்தியாவில் இறக்குமதியாகி உள்ளன. ராலி, பி.எஸ்.ஏ, ரட்ஜ், ஹம்பர் என பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகமாக இருந்தது.

  

1940களில் இறக்குமதி பொருட்களின் மீதான வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிலிருந்த தொழில் முனைவோர்கள், மேல் நாட்டு நிறுவனங்கள் உடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே சைக்கிள் உற்பத்தி செய்யும் பணியில் இறங்கினர்.

ALSO READ | மெக்சிகோவில் விளைநிலத்தில் பூமி உள்வாங்கி பெரிய பள்ளம்: பீதியடைந்த மக்கள்

அதற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை கூர்ந்து கவனித்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் நேரடியாக சைக்கிள் உற்பத்தி பணியை தொடங்கினர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ள மிதிவண்டியின் தனித்தன்மை, நீண்ட ஆயுள் மற்றும் பல்துறைத்திறன் ஆகியவற்றை ஒப்புக்கொள்வதற்காகவும், இது ஒரு எளிய, மலிவு, நம்பகமான, தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான போக்குவரத்து வழிமுறையாகும். சைக்கிள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை வளர்க்கும் ஒரு நல்ல விருப்பமாகும்.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: